பிரபல இசை பின்னணி பாடகி உமா ரமணன் மறைந்தார்.

  • IndiaGlitz, [Thursday,May 02 2024]

 

பூங்கதவே தாழ்திறவாய் என்ற பாடலின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான பிரபல இசை பின்னணி பாடகியான உமா ரமணன் தனது 69 வயதில் உடல் நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் இரவு 9.30 மணி அளவில் காலமானார்.

தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடி ஹிட் கொடுத்த உமா, வைதேகி காத்திருந்தாள், பன்னீர் புஷ்பங்கள், நிழல்கள், திருப்பாச்சி, தில்லு முள்ளு போன்ற படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார். இளையராஜா, வித்யாசாகர், எம்எஸ்வி போன்ற இசை அமைப்பாளர்கள் இசையில் பாடி அசத்திய இவர், இளையராஜா இசையில் பாடிய ஆகாய வெண்ணிலாவே பாடல், பன்னீர் புஸ்பங்கள் படத்தின் ஆனந்த ராகம் பாடலை பாடி ரசிகர் மனதில் தனி இடத்தை பிடித்தார். பிரபல நடன கலைஞரான பத்மா சுப்ரமணியத்திடம் பயிற்சியும் பெற்றுள்ளார்.நடன கலைஞர் மற்றும் மேடை நிகழ்ச்சி கலைஞராக புகழ் பெற்றவர்.

தன்னுடைய கணவர் ஏவி ரமணனுடன் இணைந்து கச்சேரியில் பாடியுள்ளார். தனது 35 வருட இசை வாழ்க்கையில் 6000 மேடை கச்சேரியில் பாடியுள்ளார்.பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடி விருதுகளையம் வெகுமதிகளையும் பெற்றவர். பழனி விஜயலக்ஷ்மியிடம் பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்று முடித்தவர். ரமணனின் சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக பத்து ஆண்டுகள் தொடர்ந்தார். தன் வாழ்நாள் முழுவதும் இசையால் வாழ்ந்த இசைமதி வான் நிலவில் வாழவே தன்னை மறைத்து கொண்டது.

உமா ரமணன் பாடல்கள் - https://www.raaga.com/tamil/album/remembering-uma-ramanan-songs-TC0002035-play

More News

சிஎஸ்கே மேட்ச் பார்க்க சென்றது ஒரு குற்றமா? திடீரென கிளம்பிய திருமண வதந்தி.. 'தமிழும் சரஸ்வதியும்' நடிகை விளக்கம்..!

நேற்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்த நிலையில் இந்த போட்டியில் சிஎஸ்கே அணி 7 வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

மகிழ்ச்சியின் பின்னால் உள்ள இரகசியம் என்ன தெரியுமா ?

வாழ்க்கை என்பது ஒரு முறை தான் அதை மகிழ்ச்சியாக வாழ்ந்து விட வேண்டும். எவ்வித சிரமமான சூழலிலும் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயலுங்கள். அப்போது தான் உங்கள் பகைவன் கூட உங்களை எதிர்க்க தயங்குவான்...

நெல்சன் படத்தில் நடிப்பதை உறுதி செய்த கவின்.. நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவு..!

இயக்குனர் நெல்சன் நேற்று ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் அந்த நிறுவனத்தின் முதல் படம் குறித்து அறிவிப்பு மே 3ஆம் தேதி வெளியாகும்

அண்ணாமலை பயோபிக் படம் தயாராகிறதா? 2026ல் அரசியலுக்கு வரும் நடிகர் தான் நடிக்கிறாரா?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்க்கை வரலாறு திரைப்படம் விரைவில் உருவாக இருப்பதாகவும் இதில் அண்ணாமலை கேரக்டரில் 2026 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவேன் என்று சொன்ன நடிகர் தான் நடிக்க

குரு பெயர்ச்சி 2024: யாருக்கு யோகம்? யாருக்கு வெற்றி ? | Subash Balakrishnan |ஆன்மீகக்ளிட்ஸ்

பிரபல ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன் அவர்கள், ஆன்மீக க்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், 2024ம் ஆண்டு குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன