நான் நடிகையினு என் பையனுக்கு தெரியாது - பூர்ணிமா பாக்யராஜ்

  • IndiaGlitz, [Tuesday,April 25 2023]

1980-களில் மிகவும் பிரபலமான கதாநாயகியாக இருந்தவர் நடிகை பூர்ணிமா பாக்யராஜ். தற்போது இவர் சிறந்த குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் ஆடை வடிவமைப்பின் மீதுள்ள தன்னுடைய ஆர்வத்தை பற்றியும் சினிமாவில் தான் நடிக்கும் கதாபாத்திரம் பற்றியும் நமக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

உங்களுடைய உடை மற்றும் நீங்கள் தேர்வு செய்யும் நிறம் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். உடைகள் மீதான உங்கள் ஆர்வம் எப்போது ஆரம்பித்தது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நடிகை பூர்ணிமா பாக்யராஜ் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே நல்ல நிறத்தில் உடைகளை தேர்வு செய்து அணிவது எனக்கு மிகவும் பிடிக்கும் தற்போது சினிமா துறையிலும் நான் அந்த வழக்கத்தை கடைபிடிக்கிறேன் என்று பதிலளித்தார்.

திருமணத்திற்கு பிறகு ஏன் நடிக்கவில்லை என்ற கேள்வி கேட்கப்பட்டது அதற்கு நடிகை பூர்ணிமா பாக்யராஜ் திருமணத்திற்கு பிறகு நடிக்க வேண்டாம் என்று நான் தான் முடிவு எடுத்தேன். குடும்ப வாழ்க்கையில கவனம் செலுத்த வேண்டும் என்று தான் நினைத்தேன். பின் குழந்தைகள் மற்றும் அவர்களின் பள்ளி போன்றவற்றை கவனித்து கொண்டதால் சினிமாவில் கவனம் செலுத்த முடியவில்லை மற்றும் குடும்ப வாழ்கை மிகவும் பிடித்து போனதால் நான் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தேன் என்று பதிலளித்தார்.

 

More News

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் சிஎஸ்கே வீரர்.. பிசிசிஐ அறிவிப்பு..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி சற்று முன் அறிவிக்கப்பட்ட உள்ள நிலையில் அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஒருவர் இடம் பெற்றுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள்

கேரளாவில் பிரதமரை பாதுகாத்த பாதுகாவலர்கள்: குஷ்பு வெளியிட்ட வீடியோ..!

கேரளாவுக்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்திருந்த போது அவர் மீது மலர்களை தூவிய போது மலருடன் சேர்ந்து ஒரு பொருளும் விழுந்ததை அடுத்து அதை பிரதமரின் பாதுகாவலர்கள் தகுந்த நேரத்தில்

ஒரே ஒரு பாடலுக்கு ரூ.1 கோடி சம்பளம்.. ரஜினி, விஜய் பட நடிகையின் டிமாண்ட்..!

ரஜினி, விஜய் படத்தில் நடித்த நடிகை ஒருவர் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது

மிரட்டலான கிளிம்ப்ஸ் வீடியோ.. சிவகார்த்திகேயனின் 'அயலான்' படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தீபாவளி என சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில்

அரைநிர்வாண கோலத்தில் 'செவ்வாய்கிழமை' நடிகை.. வைரலாகும் போஸ்டர்..!

'செவ்வாய்கிழமை' என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் படத்தில் நடித்துள்ள பிரபல நடிகை ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் இருக்கும் போஸ்டர் வெளியாகி இருப்பதை அடுத்து இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.