வசூல் வேட்டையை அடுத்து விருது வேட்டை: 6 பிரிவுகளில் 'பொன்னியின் செல்வன்'

  • IndiaGlitz, [Saturday,January 07 2023]

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த படம் உலகம் முழுவதும் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளது என்பதும் தமிழில் வெளியான திரைப்படங்களில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் இந்த படம்தான் என்ற பெருமையை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ திரைப் படத்தின் வசூலை முறியடிக்க ‘பொன்னியின் செல்வன் 2’ படம் தான் வரும் என்று கூறப்படும் நிலையில் ‘பொன்னியின் செல்வன் 2’ வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் வசூல் வேட்டை ஆடிய ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம், விருதுகளையும் வேட்டையாடத் தொடங்கி உள்ளது. அதாவது 16வது ஆசிய திரைப்பட விழாவில் 6 பிரிவுகளில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தகுதி பெற்றுள்ளது.

சிறந்த படம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த கலை இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவாளர் மற்றும் சிறந்த காஸ்ட்யூம் டிசைனர் என்ற ஆறு பிரிவுகளில் இந்த படம் நாமினேஷன் செய்யப்பட்டுள்ள நிலையில் இவற்றில் எத்தனை விருதுகளை இந்த படம் பெறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

டாடான்னா வேற யாரும் இல்லை, உன்னை பெத்த அப்பன் தான்..  கவின் நடித்த 'டாடா' டீசர்

 தமிழ் திரைப்பட நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான கவின் நடித்த 'டாடா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு

உலகின் மிகப்பெரிய தியேட்டரில் 'வாரிசா? துணிவா?

உலகின் மிகப்பெரிய திரையரங்கமான பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள லீ கிராண்ட் ரெக்ஸ் என்ற திரையரங்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் படங்களும் வெளியாகி வருகின்றன

ஃபர்ஸ்ட் ஆப் மட்டும் தான் ரசிகர்களுக்கு .. 'துணிவு' பட ரகசியத்தை கூறிய எச்.வினோத்

 அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதை அடுத்து அஜித் ரசிகர்கள் இந்த படத்தை மிக ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 

ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளி வீராங்கனை: குவியும் வாழ்த்துக்கள்

 டெல்லியில் நடைபெற்ற தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சிறு கிராமத்தைச் சேர்ந்த மதி ரத்வா என்ற பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி தங்கம் வென்று உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள்

ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த 10 நிமிட பாடல்.. பிரபல நடிகை தகவல்

பொதுவாக ஒரு பாடல் என்றால் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கும் என்பது தெரிந்ததே. ஆனால் ஜிவி பிரகாஷ் ஒரு திரைப்படத்திற்காக 10 நிமிட பாடல் ஒன்றை கம்போஸ் செய்துள்ளதாக