இந்தியாவில் 25 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி… முன்னுரிமை யாருக்கு???

  • IndiaGlitz, [Monday,October 05 2020]

 

இந்தியாவில் கோவேக்சின், ஜைகோவ்டி என இரண்டு கொரோனா தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இந்த இரண்டொடு சேர்த்து இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி மருந்து என தற்போது 3 தடுப்பு மருந்துகள் இந்தியாவில் தீவிர பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்தத் தடுப்பூசி மருந்துகளின் சோதனை முடிவுகள் இன்னும் வெளியிடப் படவில்லை.

இந்நிலையில் இந்தியாவில் அடுத்த ஜுலை மாதத்திற்குள் 25 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் கிடைக்க வழிவகைச் செய்யப்படும் என மத்தியச் சுகாதாரத்துறை ஹர்ஷவர்தன் தெரிவித்து உள்ளார். “சண்டே சம்வத்” எனும் இணையத்தள ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட இவர், “அடுத்த ஆண்டு ஜுலை மாதத்துக்குள் இந்தியாவில் 20 முதல் 25 கோடி பேருக்கு 40 முதல் 50 கோடி “டோஸ் தடுப்பு மருந்து” போடுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது” எனத் தெரிவித்து உள்ளார். இதற்கான முன்னுரிமை பட்டியலை மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தயார் செய்து அளிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் முன்னுரிமை பட்டியலுக்கான வடிவமைப்பை மத்திய அரசே தயாரிக்கும் எனவும் தெரிவித்து இருக்கிறார்.

இதில் “கொரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்த்து முன்னணியில் நின்று களப்பணி ஆற்றி வருகிற சுகாதார பணியாளர்களுக்கு (மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ சார்பு பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் நோயாளிகளை கண்டறிதல், பரிசோதனை மற்றும் சிகிச்சையில் ஈடுபட்டுள்ள பல தொழில் பிரிவினர், தடுப்பு மருந்து போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும்” எனவும் கூறியுள்ளார்.

மேலும் பெருந்தொற்றை விரைவாக கட்டுப்படுத்துவதற்கு ஒற்றை “டோஸ் தடுப்பு மருந்தே எதிர்ப்பார்க்கப் படுகிறது. ஆனால் ஒற்றை டோஸ் தடுப்பு மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை குறைந்த அளவே உருவாக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் இரட்டை டோஸ் தடுப்பு மருந்துகள் அளிக்கப்படும் எனவும் அதில் முதல் டோஸ் சில நோய் எதிர்ப்பு பாதுகாப்பை அளிக்கிறது. இரண்டாவது டோஸ் அதை மேலும் அதிகரிக்கிறது எனத் தெரிவித்தார். ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி நுகர்வு குறித்து மத்திய அரசு சிந்தித்து வருவதாகவும் தகவல் அளித்து உள்ளார்.

More News

முதல் நாளே ஆரம்பித்த பிரச்சனை: ஷிவானியை கார்னர் செய்யும் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று தொடங்கப்பட்ட நிலையில் நேற்றைய முதல் நாளில் போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இன்று காலை வெளியான முதல் புரமோவில்

ஐபிஎல் திருவிழா ஆடுகளம்: சென்னை - பஞ்சாப் எப்படிக் கிடைத்தது இந்த வெற்றி?

அடுத்தடுத்து மூன்று தோல்விகளால் கடும் விமர்சனங்களைச் சந்தித்துவந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று கம்பீரமாக வெற்றிப் பாதைக்குத் திரும்பியது

ஓடிடியில் 'மூக்குத்தி அம்மன்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகிய 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில்

திருமணமான தங்கையை அடைய கணவருக்கு அனுப்பிய ஆபாச படம்: டிவி சீரியல் நடிகர் உள்பட 3 பேர் கைது!

திருமணமான தங்கையை மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அவருடைய கணவருக்கு ஆபாசப்படம் அனுப்பிய டிவி நடிகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

காரில் உலா வந்த டெனால்ட் ட்ரம்ப்… தனது ஆதரவாளர்களுக்காக கொரோனாவிற்கு நடுவிலும் சாகசம்!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட ட்ரம்ப்பிற்கு கடந்த வியாழக்கிழமை அன்று கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.