கொரோனா அச்சம் எதிரொலி: ஜன்னல் வழியாக குதித்து ஓடிய விமானி

விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக சந்தேகம் எழுந்ததால் விமானத்தை ஓட்டி வந்த விமானி, விமானத்தின் முன் பக்க ஜன்னல் வழியாக குதித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புனேயில் இருந்து டெல்லி வந்த விமானத்தை விமானி ஒருவர் இயக்கி வந்தார். இந்த நிலையில் விமான பயணிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக அவருக்கு திடீரென அச்சம் இருந்தது. இதனையடுத்து விமானம் டெல்லி வந்தவுடன், அவர் வழக்கமாக பயணிகள் இறங்கும் வழியில் இறங்காமல், விமானத்தின் முன் பகுதியில் உள்ள ஜன்னல் வழியாக குதித்து ஓடினார்.

இந்த நிலையில் அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவருக்கும் சோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. விமானி மட்டும் தனியாக ஜன்னல் வழியாக குதித்து விமானத்தில் இருந்து இறங்கியதால் சிறிது நேரம் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.