உலகப்புகழ் பெற்ற இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் மரணம்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் அறியப்பட்ட பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76
1942ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங், கோட்பாட்டு இயற்பியலாளர், எழுத்தாளர் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் என வாழ்ந்தவர்.
இயற்பியல் ஆராய்ச்சிகள் மட்டுமின்றி எழுத்துத்துறையிலும் அதிக ஈடுபாடு கொண்ட இவரது அண்டவியல் மற்றும் குவாண்டம் ஈர்ப்பு ஆகிய இரண்டு முக்கிய ஆய்வுகள் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இளமைப்பருவத்திலேயே நரம்பியக்க நோயினால் பாதிக்கப்பட்டு, கை கால் இயக்கம் மற்றும் பேச்சு பாதிப்புகளுக்கு உள்ளான போதிலும் கணினி வழியில் பிறருடன் தொடர்பு கொண்டு தனது எண்ணங்களை வெளிப்படுத்தினார்
அறிவியல் குறிப்புகள் உட்பட இவர் எழுதிய பல புத்தகங்கள் உலகம் முழுவதும் விற்பனையில் சிறந்து விளங்கியது. அனைவரும் அறிவியலை அறிந்துகொள்ளும் விதத்தில் எளிய நடையில் அமைந்திருப்பது இவரது எழுத்துகளின் தனிச்சிறப்பு.
இந்த நிலையில் நேற்றிரவு ஸ்டீபன் ஹாக்கிங் மரணம் அடைந்ததை அவரது உறவினர்கள் உறுதி செய்துள்ளனர். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com