தமிழ் படத்தில் அறிமுகமாகும் பாகிஸ்தான் பாடகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் தயாராகும் திரைப்படங்கள் தற்போது உலக அளவில் பேசப்பட்டு வரும் நிலையில் ஹாலிவுட் கலைஞர்கள் தமிழ் படங்களில் பணிபுரிவது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. இந்த நிலையில் இந்தியாவின் எதிரி நாடாகிய பாகிஸ்தான் பாடகர் ஒருவர் தமிழ்ப்படம் ஒன்றில் அறிமுகமாகிறார். இதன்மூலம் கலை என்பது இரு நாடுகளின் உறவையும் தாண்டியது என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
நகுல் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘செய்’ படத்தில் இடம்பெறும் ‘இறைவா...’ என்ற சூஃபி பாடலை பாகிஸ்தான் பாடகரான ஆதிஃப் அலி என்பவர் பாடியதன் மூலம் கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். ஏற்கெனவே ஒருசில பாகிஸ்தானிய பாடல்களையும், ஹிந்தி பாடல்களையும் ஆதிஃப் அலி பாடியிருக்கிறார் என்பதோடு, ராய் லக்ஷ்மி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘ஜூலி 2’ படத்திற்கும் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் பாடகர் ஒருவர் தமிழில் பாடுவது இதுவே முதல்முறை என்பதை அறிந்த ஆதிஃப் அலி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இவருடன் இணைந்து ஹிந்துஸ்தானி பாடகரான சபதஸ்வரா ரிஷுவும் ‘இறைவா....’ பாடலை பாடியுள்ளார். கேட்டவுடன் அனைவருக்கும் பிடித்துப்போகும் பாடலாகவும், நீண்ட நாட்கள் ஒலிக்கும் பாடலாகவும் இந்த சூஃபி பாடல் இருக்குமென தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நிக்ஸ் லோபஸ் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். மேலும் ‘செய்’ ஆல்பத்தில் பிரபல முன்னணி பாடகர்களான ஷங்கர் மகாதேவன், சோனு நிகம், ஷ்ரேயா கோஷல், பென்னிதயாள் மற்றும் அறிமுக பாடகி கீதாஞ்சலி ஆகியோர் பாடியிருக்கும் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. ‘ட்ரிப்பி டர்ட்டிள் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் இப்படத்தை மன்னு மற்றும் உமேஷ் இணைந்து தயாரித்துள்ளார்கள். டிசம்பர் 8ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் வெளியாகவிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com