நாளை முதல் ஓவியாவின் அடல்ட் பட டிரைலர்

  • IndiaGlitz, [Thursday,February 07 2019]

பிக்பாஸ் புகழ் ஓவியா நடித்து வரும் படங்களில் ஒன்றான 90ml திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை முதல் ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்,. இதனை ஓவியாவும் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் இருப்பதாக இந்த படத்தின் இயக்குனர் அனிதா உதுப் கூறியிருந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு சென்சாரில் 'ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது. எனவே டிரைலர் அறிவிப்பு போஸ்டரில் 'அடல்ட் டிரைலர் நாளை முதல் என்ற அறிவிப்பும் உள்ளது.

ஓவியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு சிம்பு இசையமைத்துள்ளார். மேலும் ஓவியாவை அவர் ஒரு பாடலையும் பாட வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஏற்கனவே ரிலீஸாகிவிட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா தேதியும் அறிவிக்கப்படவுள்ளது.

 

More News

ஓவியாவின் '90ml' படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள்: இயக்குனர் தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற நடிகை ஓவியா தற்போது 'காஞ்சா 3', ''90ml' , களவாணி 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

வருங்கால கணவருடன் செளந்தர்யா! வைரலாகும் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகளும் திரைப்பட இயக்குனருமான செளந்தர்யாவின் திருமணம் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மீண்டும் இணையும் சிம்ரன், த்ரிஷா

கடந்த 1999ஆம் ஆண்டு வெளிவந்த 'ஜோடி' படத்தில் சிம்ரன் நாயகியாக நடிக்க அந்த படத்தில் அவருடைய தோழிகளில் ஒருவராக ஒரு சின்ன கேரக்டரில் த்ரிஷா நடித்திருப்பார்.

பாலாவின் 'வர்மா' படம் வெளியாகாது! அதிர்ச்சி அறிவிப்பு

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கிய 'வர்மா' திரைப்படம் வெளியாகாது என அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சித்தார்த் படத்தில் இணைந்த 2 பிரபல இசையமைப்பாளர்கள்

ஒரு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்கும் படத்தில் இன்னொரு பிரபல இசையமைப்பாளர் ஒரு பாடலை பாடும் டிரெண்ட் கோல்வுட்டில் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது.