மற்றோர் பேராபத்து!!! 1990 களை விட 6 மடங்கு அதிகமாக உருகும் துருவப் பனிக்கட்டிகள்!!!

  • IndiaGlitz, [Monday,March 16 2020]

உலகம் முழுக்க தற்போது கொரோனா பற்றிய பாதிப்புகள் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன. இந்த கடுமையான பாதிப்புகளுக்கு இடையில் Ice Sheet Mass Balance and Sea level (ISMASS) நடத்திய ஒரு ஆய்வு அடுத்த ஒரு நூற்றாண்டில் சுமார் 40 கோடி மக்கள் கடும் அபாயத்தைச் சந்திக்கப் போகிறார்கள் என எச்சரிக்கை செய்கிறது.

பூமியின் பெரிய பனிக்கட்டி பிரதேசமான அண்டார்டிக்கா மற்றும் கிரீன்லாந்து பகுதிகள் 1990 களில் உருகிய அளவை விட தற்போது 6 மடங்கு அதிகரித்து இருப்பதாக (ISMASS) நடத்திய ஆய்வு குறிப்பிடுகிறது. அளவுக்கு மீறிய பனிப்பாறைகள் உருகுவதால் அடுத்த ஒரு நூற்றாண்டில் கடும் பாதிப்பை இந்த உலகம் சந்திக்க வேண்டி இருக்கும் என இந்த ஆய்வுக் குழுவின் தலைவர் இம்பி எச்சரிக்கிறார்.

1992 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 6.4 டிரில்லியன் டன் பனி இந்தப் பகுதிகளில் உருகி இருக்கிறது. இதனால் உலகளாவிய கடல் மட்டம் 17.8 மி.மீ அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறது.

இங்கிலாந்து, University of Leeds யின் பேராசிரியர் ஆண்ட்ரூ ஷெப்பர்ட் இது மிகவும் மோசமான விஷயம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். “கடல் மட்ட உயர்வில் மூன்றில் ஒரு பங்கு கிரின்லாந்து மற்றும் அண்டார்டிகா பகுதிகளின் பனிப்பாறைகள் உருகுவதே காரணமாக இருக்கிறது“ எனவும் தெரிவித்துள்ளார். 1990 களின் இதன் அளவு 5% க்கும் குறைவாக இருந்தது. ஆனால் இப்போது 6 மடங்கு அதிகரித்து இருக்கிறது என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வு முடிவின் படி சந்தேகமே இல்லாமல் 2100 இல் சுமார் 40 கோடி மக்கள் கடும் பாதிப்பை சந்திக்க வேண்டி வரும் எனவும் தெரிவித்து உள்ளது. அண்டார்டிகாவில் காணப்படும் நில மேற்பரப்புகளில் சுமார் 56 ஏரிகள் இருக்கின்றன. இந்த ஏரிகள் முழுவதும் பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்பட்டவை என்பதும் குறிப்பிடத் தக்கது.

இந்த ஆய்வுகள் செயற்கைக்கோள் உதவியுடன் நடத்தப் பட்டது. இதற்காக ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் க்ரையோசாட் – 2 செயற்கைகோள், மற்றும் அமெரிக்க விண்வெளி ஏஜென்சியின் ஐசாட் -2 செயற்கைகோள் பயன்படுத்தப் பட்டு இருக்கிறது. இந்த செயற்கைக் கோள்கள் பனிக்கட்டிகளை நுணுக்கமாக கவனிக்கும் திறன் படைத்தவை என்பதும் குறிப்பிடத் தக்கது.

செயற்கைக் கோள்களின் உதவியுடன் தொடர்ந்து துருவ பனிப் பிரதேசங்களில் பனி உருகும் அளவை மதிப்பீடு செய்து நிபுணர்கள் இந்த அளவைக் கணித்து இருக்கிறார்கள். இந்த மதிப்பீட்டு அளவுகள் Imbie’s Antartica இதழில் 2018 இல் வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.

இந்த ஆய்வின் அளவீடுகள் சரியாக இருக்கும் பட்சத்தில் 2100 ஆம் ஆண்டு கடல் மட்டத்தின் அளவு 53 செ.மீ ஆக உயர்ந்து இருக்கும் என்று சொல்லப் படுகிறது. இந்த அளவீடுகள் உண்மையில் உலகத்தின் மத்தியில் ஒரு அவநம்பிக்கையான சூழலை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத் தக்கது.

பனிக்கட்டி உருகுவதால் தற்போது ஏற்பட்டுள்ள கடல் மட்ட உயர்வில் 17.8 மி.மீட்டரில், கிரீன்லாந்து 10.6 மி.மீ (60%) பனிப்பாறை உருகும் அளவாகவும், கிரீன்லாந்து 7.2 மி.மீ (40%) பனிப்பாறை உருகும் அளவாகவும் இருக்கிறது.


அண்டாட்டிக்காவின் பனிப்பாறைகளை தொடர்ந்து கண்காணிக்கும் அமைப்பான IPCC இந்த ஆய்வு முடிவினை தற்போது கணக்கிட்டு வருகிறது. இம்பியின் இந்த முடிவுகள் அடுத்த AR6 திட்ட அளவைகளில் முதன்மையானதாக எடுத்துக் கொள்ளப் படும் எனவும் அறிவித்து இருக்கிறது.

பனி உருகும் அளவுகள் 1990 களில் ஒரு ஆண்டுக்கு 81 பில்லியன் டன்னாகவும், 2010 களில் இது 475 பில்லியன் டன்னாகவும் உயர்ந்தது என்பதும் கவனிக்கத் தக்கது. ஒரு 20 ஆண்டுகளில் கிட்டத் தட்ட 400 டன் அளவு அதிகரித்து இருக்கிறது. இவை பழைய உருகும் தன்மைகள். தற்போது அதிகரித்துள்ள 6 மடங்கு இப்படியே தொடருமானால் கடல் மட்டத்தின் உயர்வு 53 மி.மீட்டரை எட்டி கடும் பாதிப்பை ஏற்படுத்துவது உறுதி என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நன்றி – Supports the Guardian
 

More News

தமிழக பள்ளி, கல்லூரிகளை மூட முதல்வர் ஈபிஎஸ் உத்தரவு!

கொரோனா  வைரஸ் காரணமாக எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை

கொரோனா எதிரொலி: துப்பாக்கி வாங்க நீண்ட வரிசையில் நிற்கும் பொதுமக்கள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக மால்கள், கடைகள் ஆகியவை மூடப்பட்டு வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிக்க மக்கள் முன் வந்து கொண்டிருக்கின்றனர்.

முதலமைச்சரை உருவாக்குபவன் தான் தலைவன்: பொன்ராஜ்

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது கட்சி வெற்றி பெற்றால், தான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்றும்,

'கொரோனா' பெயரில் புதிய தமிழ்ப்படம்!

உலகின் அனைத்து நாட்டு மக்களும் கொரோனா குறித்து பேசி வரும் நிலையில் இதையே ஒரு டைட்டிலாக வைக்க தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

கொரோனா வைரஸ் எதிரொலி: தயாரிப்பாளர் சங்கம் முக்கிய அறிவிப்பு

சீனா, இத்தாலி, ஸ்பெயின் அமெரிக்கா உள்பட உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனித உயிர்களை பலி வாங்கி கொண்டு வரும் நிலையில்