கொரோனா; ஆபத்தான நகரங்களில் ஒன்று சென்னை!!! இலங்கை சுகாதாரத்துறை அறிவிப்பு!!!

  • IndiaGlitz, [Monday,March 30 2020]

 


கொரோனா பரவலைத் தடுக்க இலங்கை அரசு பல தடுப்பு நடவடிக்ககைளை எடுத்து வருகிறது. கொரோனா பாதிப்புள்ள ஒரு கிராமத்தை முற்றிலும் தனிமைப்படுத்தி இராணுவப் பாதுகாப்புடன் வைத்திருப்பது முதற்கொண்டு அந்நாட்டில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கொரோனா பாதித்த நாடுகள் மற்றும் நகரங்கள் பட்டியலையும் இலங்கை அரசு தயாரித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த பட்டியலில் உள்ள நாடுகள் மற்றும் நகரங்களில் இருந்து திரும்பியவர்கள் தற்போது இலங்கையில் தனிமைப்படுத்தப் பட்டு வருகின்றனர்.

சென்ற வாரத்தின் தொடக்கத்தில் சென்னையில் இருந்து இலங்கைக்கு சென்ற 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை இலங்கை சுகாதாரத் துறை கண்டுபிடித்தது. மேலும் இந்த வாரத்தில் சென்னையில் இருந்து திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதிப்படுத்திய இலங்கை அரசாங்கம் கடுமையான பாதிப்புள்ள நகரங்களில் பட்டியலில் சென்னையையும் சேர்த்துக் கொண்டிருக்கிறது.

எனவே, கடந்த 14 நாட்களில் சென்னை சென்று திரும்பியவர்களின் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் தற்போது இலங்கை சுகாதாரத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கடந்த 14 நாட்களில் சென்னையில் இருந்து இலங்கைக்கு திரும்பியவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது விவரங்களை கொடுக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டிருக்கிறது. இதுவரை சென்னையில் இருந்து இலங்கை திரும்பிய 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இலங்கை அரசு இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் இதுவரை 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. மேலும், கொரோனா நோய்த்தொற்றினால் முதல் மரணமும் நிகழ்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

கொரோனா வைரஸ் இப்படித்தான் இருக்கும்!!! புகைப்படம் வெளியிட்ட இந்திய மருத்துவக் கழகம்!!!

கொரோனா பாதிப்பினால் உலகம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இக்கட்டான சூழலைச் சந்தித்து வருகிறது.

சம்பளம் இன்றி நர்ஸாக பணிபுரியும் பிரபல நடிகை

பாலிவுட் திரையுலகின் காஸ்டியூம் டிசைனராக இருந்து அதன்பின் நடிகையாக மாறியவர் ஷிகா மல்ஹோத்ரா. 'அன்சீன்' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி

தமிழகத்தில் மேலும் 17 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு: முதல்வர் பழனிச்சாமி தகவல்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஐஏஎஸ் அதிகாரிகளுடன் சற்றுமுன் ஆலோசனை செய்த தமிழக முதலமைச்சர் பழனிசாமி, இந்த ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? கமல்ஹாசன் கேள்வி

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதை அடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட உலக நாயகன் நடிகர் கமலஹாசன் அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் கொரோனா வைரஸுக்கு எதிரான விழிப்புணர்வு

பிரபல நகைச்சுவை நடிகர் கொரோனாவிற்கு பலி: ரசிகர்கள் அதிர்ச்சி

ஏழை முதல் பணக்காரர் வரை, பாமரர் முதல் பெரிய பதவியில் இருப்பவர் வரை பாகுபாடின்றி கொரோனா வைரஸ் தாக்கி வரும் நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவரும் கொரோனா வைரஸுக்கு பலியாகியுள்ளது