சாமியாராக மாறிவிட்ட பிரபல நகைச்சுவை நடிகரின் மகன்!

  • IndiaGlitz, [Wednesday,May 15 2019]

தமிழ்த்திரையுலகின் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ஓமக்குச்சி நரசிம்மன். 1946ஆம் ஆண்டு 'ஒளவையார்' என்ற படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் 'மாந்தோப்பு கிளியே, 'மீண்டும் கோகிலா', 'போக்கிரி ராஜா,' சம்சாரம் அது மின்சாரம், 'ஜெண்டில்மேன்', ''இந்தியன்' என ரஜினி, கமல் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் தொண்டை புற்றுநோய் காரணமாக கடந்த 2009ஆம் ஆண்டு ஓமக்குச்சி நரசிம்மன் காலமானார். அவர் நடித்த கடைசி படம் 'தலைநகரம்'. ஓமக்குச்சி நரசிம்மனுக்கு சரஸ்வதி என்ற மனைவியும், மூன்று மகள்களும் ஒரு மகனும் உண்டு. மகன் பெயர் ஓம் காமேஷ்வரன்.

இந்த நிலையில் ஓம்காமேஷ்வரன் தற்போது சாமியாராக மாறிவிட்டாராம். இயேசு, சாய்பாபா உள்பட பலரை நேரில் பார்த்துள்ளதாகவும், அதனால்தான் சாமியாராக மாறிவிட்டதாகவும் இவர் கூறி வருகிறார். தற்போது இவர் சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.