யாரும் கனவில் கூட நினைக்கவில்லை: விராட் கோஹ்லி சாதனை குறித்து பிரபல இயக்குனர்..!

  • IndiaGlitz, [Thursday,November 16 2023]

சச்சின் டெண்டுல்கர் சாதனை முறியடிக்கப்படும் என யாரும் கனவில் கூட நினைக்கவில்லை என பிரபல இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் விராட் கோஹ்லி மிக அபாரமாக விளையாடி சதம் அடித்தார். ஏற்கனவே அவர் 49 சதங்கள் அடித்து சச்சின் டெண்டுல்கர் சாதனையை சமன் செய்த நிலையில் நேற்றைய சாதனை மூலம் அவர் டெண்டுல்கர் சாதனையை முறியடித்தார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நேற்றைய போட்டியின் போது மைதானத்தில் பார்வையாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய சாதனையை முறித்த விராட் கோஹ்லிக்கு எழுந்து நின்று கைதட்டி கைதட்டினார். மேலும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில் விராட் கோஹ்லியின் சாதனை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் கருத்து கூறி வரும் நிலையில் பிரபல இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து தெரிவித்துள்ளார்.



‘சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டும் என்பது தான் நியதி. ஆனால் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறுவதாக அறிவித்த போது அவரது சாதனையை யாராவது ஒருவர் முறியடிப்பார்கள் என்று கனவில் கூட யாரும் நினைக்கவில்லை. ஆனால் அதை கிங் கோக்லி நிறைவேற்றி உள்ளார் அவருக்கு எனது வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.