தமிழகத்தில் நாளை ஊரடங்கு இல்லையா? என்ன காரணம்?
- IndiaGlitz, [Saturday,May 22 2021]
தமிழகத்தில் கடந்த மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையில் தமிழகத்தில் மேலும் 1 வாரத்திற்கு ஊரடங்கு நீடிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பேச்சு வார்த்தை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஊரடங்கு விதிமுறைகள் எதுவும் கடைப்பிடிக்கப் படாது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் அடுத்த வாரத்திற்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. இதனால் சாதாரண மளிகைக் கடைகள் முதற்கொண்டு அத்யாவசியப் பொருட்களின் கடைகளும் திறக்கப்படாது என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அனைத்து விவரங்களையும் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் தமிழக அரசு தெரிவிக்கும்.
இந்நிலையில் மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கி வைத்துக் கொள்வதற்காக தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு விதிமுறைகள் கடைப்பிடிக்கப் படாது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.