''வடகொரியாவில் கொரோனா தொற்று இல்லை'' உண்மை நிலவரம் என்ன???
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா தாக்கத்தால் உலக நாடுகள் அனைத்தும் அலறிக்கொண்டிருக்கும் போது ஒரு நாடு மட்டும் ஏவுகளை சோதனைகளை நிகழ்த்திக்கொண்டு மிகவும் அமைதியாக இருக்கிறது. கடந்த 2 ஆம் தேதி அந்நாடு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி வடகொரியாவில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. அதெப்படி, வடகொரியா கொரோனா வைரஸ்க்கு சாதகமாக இன்னும் ஒரு எண்ணைக்கூட தெரிவிக்கவில்லை என்று தற்பேது உலக நாடுகள் வியப்பை தெரிவித்து வருகின்றன.
இதற்கு கொரோனா தடுப்புக்காக அந்நாடு மேற்கொண்ட நடவடிக்கைகள் தான் காரணம் எனவும் ஒருபக்கம் கருத்து கூறப்படுகிறது. உண்மையில் வடகொரியா கொரோனா பரவல் ஆரம்பித்த நாட்களில் இருந்தே கடுமையான பாதுகாப்புகளை மேற்கொண்டது. கடந்த ஜனவரி முதலே விமானம் மற்றும் கடல்வழி போக்குவரத்தை அந்நாடு முழுவதுமாக தடைசெய்து இருந்தது.
ஆனாலும், நாட்டில் எவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது சந்தேகத்தை வரவழைப்பதாக தென்கொரியாவில் உள்ள அமெரிக்க தூதரக ஜெனரல் ராபர்ட் அப்ராம்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். எங்களுக்கு கிடைத்த புலனாய்வு தகவலின்படி இது உண்மையே இல்லை எனவும் குறிப்பிடுகிறார். மேலும், வடகொரியா, சீனா மற்றும் தென்கொரியாவுடன் எல்லைகளைப் பகிர்ந்து இருக்கிறது. பல பொருளாதார நடவடிக்கைகளையும் எல்லைகளின் வழியாக நடத்தும்போது இது சாத்தியமே இல்லை எனவும் கூறியிருக்கிறார்.
கொரேதானா பரவலுக்கு எதிராக, ஆசிய நாடுகளில் உள்ள மற்ற நாடுகளைக் காட்டிலும் வடகொரியா மிக விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தற்போது செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஜனவரி மாதத்தின் இறுதியில் அந்த நாட்டில் எல்லைகள் முழுவதுமாக மூடப்பட்டு இருக்கிறது. மேலும், விமானம், கடல் போக்குவரத்து சேவையும் முழுமையாக தடை செய்யப்பட்டது. அந்நாட்டிற்கு அதுவரை வந்திருந்த வெளிநாட்டினரையும், வெளிநாடு சென்று திரும்பியவர்களையும் நாட்டின் தலைநகர் பியாங்யாங்கில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அந்நாட்டு செய்தி நிறுவனமான என்.கே. நியூஸ் 10 ஆயிரம் நபர்களை அந்நாடு தனிமைப்படுத்தி வைத்திருந்ததாகத் தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments