அடுத்து வருகிறது சுனாமி!!! ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!!!

  • IndiaGlitz, [Tuesday,March 17 2020]


அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகளில் உள்ள Falkland Island தீவில் பெரிய சுனாமிகள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த வகையான சுனாமி ஒரு மில்லியன் ஆண்டுக்கு ஒரு முறைதான் ஏற்படும் என்றும் குறிப்பிடப் பட்டு இருக்கிறது. 

Falkland Island பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலச்சரிவின் காரணமாக எதிர்காலத்தில் சுமார் 300 அடிகளுக்கு மேல் அலைகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கை செய்யப் பட்டு இருக்கிறது. மேலும், இதற்காக யாரும் பயப்பட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. 

Heriot watt University, British Geological துறை இணைந்து Falkland Island பகுதியில் நிலச்சரிவுக்கான அளவை மதிப்பிடும் வேலைகளில் ஈடுபட்டு வந்தது. இந்தப் பகுதிகளில் 50 மில்லியன் கன மீட்டர் நீர் தொடர்ந்து நகர்ந்து செல்லும் வலுவான நீரோட்டங்கள் காணப்படுகின்றன. இந்த வலுவான நீரோட்டங்களினால் 400 முதல் 1000 மீட்டர் வரை நீருக்கடியில் வண்டல் மண் புரட்டிப் போடப்படுகிறது. வண்டல் மண் புரட்டிப் போடப்படுவதால் அப்பகுதிகளில் சறுக்கல் குழிகள் தோன்றுகிறது. ஒரு இடத்தில் சறுக்கலும் மற்றோர் இடத்தில் மண் குவிப்பும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு வருகிறது. கடற்பரப்பும் அப்பகுதியில் செங்குத்தாக இருப்பதால் குவிக்கப் படுகின்ற வண்டல் மண் எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் அபாயம் இருந்து வருகிறது.

தற்போது இப்பகுதியில் 100 கி.மீ. இடைவெளிகளில் பெரிய 3 வண்டல் மண் முகடுகள் இடிந்து விழுந்து இருக்கின்றன. இந்தப் பாதிப்பு ஒரு நகரத்தை புதைக்கப் போதுமான சக்தி வாய்ந்தது என்று ஆய்வுகுழு தெரிவித்து இருக்கிறது. இந்த வண்டல் மண் குவியல்கள் அனைத்தும் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படும் என்றும் உறுதியாக சொல்ல முடியாது எனவும் ஆய்வுக்குழு தெரிவித்து இருக்கிறது. 

ஆய்வுக்குழுவில் உள்ள பேராசியர் ஹெரியட் வாட் “முதலில் கடல் வண்டல் மண்ணில் உள்ள நில அடர்த்தியில் காணப்படும் வேறுபாடுகளைக் கண்டுபிடிக்க நில அதிர்வுகளின் தரவுகளை சேகரிக்க முயற்சி செய்தோம். அதன் முடிவுகள் அதிர்ச்சி ஏற்படுத்துபவையாக இருக்கின்றன எனத் தெரிவித்து இருக்கிறார். 

2004 இல் இந்தியப் பெருங்கடலில் கடுமையான சுனாமி பாதிப்பு ஏற்பட்டது. அடுத்து ஜப்பானில் 2011 இல் சுனாமி பாதிப்பு ஏற்பட்டது. இவை இரண்டும்  நேரடியான சுனாமி பாதிப்புகளாக இருந்தன. அப்படி இல்லாமல், அட்லாண்டிக் பகுதியில் நிலச்சரிவினால் சுனாமி வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது. 

1998 இல் பப்புவா நியூ கினியா மற்றும், 2018 இல் இந்தோனேசியா வின் சுலவேசி பகுதிகளில் சுனாமி ஏற்பட்டு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அட்லாண்டிக் பகுதிகளில் வரவிருக்கும் சுனாமியால் Falkland Island பகுதிகளில் கடும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அங்குள்ள கடலோர பகுதிகளை இந்த சுனாமி குறி வைக்கும். வண்டல் மண் சரிந்து விழும் போது கடலில் அழுத்தம் ஏற்பட்டு 300 மீட்டர் உயரங்களுக்கு அலைகள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என எச்சரிக்கை செய்துள்ளனர். 
 

More News

கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிச்சிட்டோம்!!! நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி 

நெதர்லாந்தின் university of Utrecht பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இது குறுகி

விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய 40 பேர்களுக்கு கொரோனா பாதிப்பா? அதிர்ச்சி தகவல்

கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் மருத்துவ கண்காணிப்பில் இருந்த ஒருவர் திடீரென மருத்துவமனையில் இருந்து தப்பித்து விபத்தில் சிக்கினார். அவரை காப்பாற்றி

பிணத்தை வைத்துக்கொண்டு 45 நிமிடங்களாக காரில் சுற்றிய இந்திய இளைஞர் – வழக்கு விசாரணை

ஐக்கிய அரபு நாட்டில் கடந்த ஜுலை மாதத்தில் 27 வயதான இந்தியர் ஒருவர் தன் காதலியைக் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல்துறையினர்களால் கமலஹாசன் துன்புறுத்தபாடுகிறாரா? அதிர்ச்சி தகவல்

காவல்துறையினரால் கமலஹாசன் துன்புறுத்தப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கொரோனா பாதிப்பு: இந்தியாவில் மூன்றாவது உயிர் பலி!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்து இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப் பட்டு மும்பை கஸ்தூரிபா மருத்து