நயன்தாரா நயன்தாராதான்: அவருக்கு ஈடு இணை யாரும் இல்லை; சொன்னது யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நயன்தாரா, நயன்தாரா தான் என்றும் அவரைப் போல் இன்னொருவர் இல்லவே இல்லை என்று பிரபல நடிகை ஒருவர் கூறியிருப்பது வைரலாகி வருகிறது.
நேற்று வெளியான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் இரண்டு நாயகிகளாக நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துள்ளனர். நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தான் இயக்குனர் என்றாலும் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் வைத்திருந்தார். குறிப்பாக இந்த படத்தில் சமந்தாவின் காட்சிகள் கவிதை போல் மிகவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர் .
இந்த நிலையில் தனது சக நடிகை நயன்தாரா குறித்து சமந்தா கூறியதாவது: நயன்தாரா நயன்தாரா தான். அவருக்கு ஈடு இணை யாருமே இல்லை. நான் இதுவரை சந்தித்தவர்களில் நயன்தாரா மிகவும் உண்மையானவர், விசுவாசமானவர், மேலும் கடின உழைப்பாளி’ என்று சமந்தா புகழாரம் சூட்டியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
#Nayanthara is #Nayanthara??there is no one like her . She is real,fiercely loyal and one of the most hard working people I have met #Kanmani #KaathuvakulaRenduKaadhal #AskSam https://t.co/8Crkmn8BLE
— Samantha (@Samanthaprabhu2) April 29, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com