தமிழக சிறுமிக்கு உலகக்கோப்பை கால்பந்து போட்டியின்போது கிடைத்த பெருமை
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த போட்டி தொடரின்போது உலகக்கோப்பையில் பயன்படுத்தும் கால்பந்தை எடுத்து செல்லும் பெருமை ஒரு தமிழக சிறுமிக்கு கிடைத்தது. அவர்தான் 11 வயது நதானியா ஜான். தனது கனவு நனவாகிவிட்டதாகவும், இந்த பெருமை தனக்கு கிடைக்கும் என்று தான் நினைத்தே பார்க்கவில்லை என்றும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நதானியா ஜான் இதுகுறித்து கூறியதாவது:
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பந்தை எடுத்து செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. எனது வாழ்நாள் கனவு நிஜமாகிவிட்டது. இதுவரை நான் திரையில் மட்டுமே கண்டு ரசித்த தலைசிறந்த கால்பந்து வீரர்களை நேரில் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. விளையாட்டு வீரர்களுடன் எனக்கு பேச அனுமதி கிடைக்கவில்லை என்றாலும் அனைத்து நாட்டு வீரர்களுக்கு மத்தியில் இந்தியாவின் சார்ப்பில் நான் அதிகாரப்பூர்வ பந்தை எடுத்து செல்ல கிடைத்த வாய்ப்பு எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. பந்தை எடுத்து செல்லும் அந்த தருணத்தில் நான் அச்சத்தின் உச்சதில் இருந்தேன்' என்று கூறியுள்ளார்.
இந்த வாய்ப்பு கிடைத்தது குறித்து நதானியா ஜான் தாயார் கூறியபோது, 'நதானிக்கு கால்பந்து என்றால் ரொம்ப பிடிக்கும். ஆனால் இப்படி ஒரு வாய்ப்பு அவளுக்கு கிடைக்கும் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை, நான் மட்டும்தான் நதானியுடன் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தேன்.
எங்கள் இருவருக்கும் ரஷ்யாவில் நல்ல வரவேற்பும் மரியாதையும் கிடைத்தது. ரஷ்யாவில் முக்கியமான இடத்தை எங்களுக்கு சுற்றி காண்பித்தார்கள். அவள் அனைத்து வீரர்களையும் சந்தித்தாள். ஆனால் மெஸ்சியை மட்டும் சந்திக்க முடியவில்லை என்பது ஒரு பெரிய ஏமாற்றமாக இருந்தது என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com