கமலின் தனித்தன்மையும் ரஜினியின் சுயரூபமும்: நாஞ்சில் சம்பத்

  • IndiaGlitz, [Sunday,December 23 2018]

திமுகவில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கி பின்னர் வைகோ திமுகவில் இருந்து பிரிந்தபோது அவருடைய மதிமுகவில் பணியாற்றி, பின்னர் வைகோவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்து, ஜெயலலிதா மறைவிற்கு பின் தினகரன் அணியில் இருந்து பின்னர் தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்தவுடன் அக்கட்சியில் இருந்தும் விலகி தற்போது எந்த கட்சியிலும் இல்லாமல் எந்த தனித்தன்மையும் இல்லாமல் இருக்கும் அரசியல்வாதி நாஞ்சில் சம்பத்.

இவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கமல்ஹாசனின் தனித்தன்மை குறித்தும், ரஜினியின் சுயரூபம் குறித்தும் கருத்து கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாடாளமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று கூறி தானும் போட்டியிடுவேன் என கூறியிருப்பது அவரது தனித்தன்மையை காட்டுவதாகவும், கட்சி இன்னும் ஆரம்பிக்கவில்லை அதனால் டெல்டா மாவட்டங்களை பார்வையிட செல்லவில்லை என்று ரஜினி கூறியுள்ளது அவரது சுயரூபத்தை காட்டுவதாகவும் கூறியுள்ளார்.

40 தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று கூறியதில் என்ன தனித்தன்மை உள்ளது என்றும், கட்சி ஆரம்பிக்கும் முன் கூட்டணி குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று ரஜினி கூறியதில் என்ன சுயரூபம் உள்ளது என்றும், நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.