close
Choose your channels

தெலுங்கில் அறிமுகமாகும் கோலிவுட்டின் இளம் இசையமைப்பாளர்

Friday, March 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மெலடி பாடல்களை ரசிப்பதற்கு என்றே எந்த காலத்திலும் ஒரு தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உண்டு. எந்த காலத்திற்கும் உரிய வகையில் மெலடி பாடல்களை இசையமைப்பதில் ஒருசில இசையமைப்பாளர்களே புகழ் பெற்றுள்ள நிலையில் தனது மெலடி இசையின் மூலம் படிப்படியாக முன்னேறியவர் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர். தமிழில் சசிகுமார் நடிக்கும் "நாடோடிகள் 2"  மற்றும் அதர்வா நடிக்கும் 'ஒத்தைக்க்கு ஒத்த', எஸ் ஜே சூர்யாவின் பெயர் இடப்படாத  ஒரு புதிய படம் என பிசியாக இருக்கும் ஜஸ்டின் பிரபாகரன்  தற்போது  "அர்ஜுன் ரெட்டி" புகழ் விஜய் தேவேர்கொண்டா நடிக்கும் படத்தில் இசையமைப்பதன் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார்.

ஏற்கனவே தமிழ், மலையாள மொழி படங்களுக்கு இசையமைத்து வரும் ஜஸ்டின் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாவது குறித்து கூறுகையில், 'அர்ஜுன் ரெட்டி" புகழ் விஜய் தேவேர்கொண்டாவுக்கு இளம் ரசிகர்கள் இடையே அவருக்கு இருக்கும் புகழ் சொல்லில் அடங்காதது. அவர் படத்தின் மூலம் அறிமுகமாவது என் பாக்கியம். இந்தப் படத்தின் இயக்குனர் எனக்கு நீண்ட நாள் நண்பர். நாங்கள் இருவரும் ஏற்கனவே " மரோ பிரபஞ்சம்" ,என்ற குறும் படத்தில்  பணியாற்றினோம். இப்போது அந்த திரை படத்துக்கான இசை கோர்ப்பு நடந்து வருகிறது. விரைவில் தலைப்பு  பற்றிய முறையான தகவல் வரும்.

விஜய்தேவகொண்டாவின் படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாவது எனக்கு மிகுந்த பெருமை. இசைக்கு எப்படி மொழி பிராந்தியம் அநாவசியமோ, இசை கலைஞனுக்கும் அப்படியே.  காற்றின் தேசம் எங்கும் செல்லும், கானமே ஒரு இசை கலைஞனின் உயிர் மூச்சு" என்று ஜஸ்டின் பிரபாகரன் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment