தெலுங்கில் அறிமுகமாகும் கோலிவுட்டின் இளம் இசையமைப்பாளர்

  • IndiaGlitz, [Friday,March 30 2018]

மெலடி பாடல்களை ரசிப்பதற்கு என்றே எந்த காலத்திலும் ஒரு தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உண்டு. எந்த காலத்திற்கும் உரிய வகையில் மெலடி பாடல்களை இசையமைப்பதில் ஒருசில இசையமைப்பாளர்களே புகழ் பெற்றுள்ள நிலையில் தனது மெலடி இசையின் மூலம் படிப்படியாக முன்னேறியவர் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர். தமிழில் சசிகுமார் நடிக்கும் நாடோடிகள் 2  மற்றும் அதர்வா நடிக்கும் 'ஒத்தைக்க்கு ஒத்த', எஸ் ஜே சூர்யாவின் பெயர் இடப்படாத  ஒரு புதிய படம் என பிசியாக இருக்கும் ஜஸ்டின் பிரபாகரன்  தற்போது  அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவேர்கொண்டா நடிக்கும் படத்தில் இசையமைப்பதன் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார்.

ஏற்கனவே தமிழ், மலையாள மொழி படங்களுக்கு இசையமைத்து வரும் ஜஸ்டின் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாவது குறித்து கூறுகையில், 'அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவேர்கொண்டாவுக்கு இளம் ரசிகர்கள் இடையே அவருக்கு இருக்கும் புகழ் சொல்லில் அடங்காதது. அவர் படத்தின் மூலம் அறிமுகமாவது என் பாக்கியம். இந்தப் படத்தின் இயக்குனர் எனக்கு நீண்ட நாள் நண்பர். நாங்கள் இருவரும் ஏற்கனவே மரோ பிரபஞ்சம் ,என்ற குறும் படத்தில்  பணியாற்றினோம். இப்போது அந்த திரை படத்துக்கான இசை கோர்ப்பு நடந்து வருகிறது. விரைவில் தலைப்பு  பற்றிய முறையான தகவல் வரும்.

விஜய்தேவகொண்டாவின் படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாவது எனக்கு மிகுந்த பெருமை. இசைக்கு எப்படி மொழி பிராந்தியம் அநாவசியமோ, இசை கலைஞனுக்கும் அப்படியே.  காற்றின் தேசம் எங்கும் செல்லும், கானமே ஒரு இசை கலைஞனின் உயிர் மூச்சு என்று ஜஸ்டின் பிரபாகரன் கூறியுள்ளார்.

More News

வாய்ப்புகாக படுக்கை விஷயத்தில் பொய் சொன்னாரா ரகுல்? உண்மையை உடைக்கும் பிரபல நடிகை

ரகுல் ப்ரித்திசிங் சமீபத்தில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் குறித்து கூறியபோது, 'மற்ற இடங்களில் எப்படியோ, தெலுங்கு திரையுலகில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இல்லை

சுசிலீக்ஸ் போல் ஸ்ரீலீக்ஸ்: பிரபல நடிகர்கள் கலக்கம்

பிரபல பாடகி சுசித்ராவின் சமூகவலைத்தள பக்கம் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டு சுசிலீக்ஸ் என்ற பெயரில் கோலிவுட்டில் ஏற்படுத்திய பரபரப்பு அனைவரும் அறிந்ததே.

தமிழ்நாட்டில் இடமில்லை: வேற மாநிலத்திற்கு போங்க: கமல், ரஜினியை தாக்கிய முதல்வர்

கோலிவுட் திரையுலகில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோர்களின் அரசியல் வருகை அரசியல் தலைவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உலகம் நீங்கள் அழவேண்டும் என்று விரும்பியது: அஸ்வின் நெகிழ்ச்சி பதிவு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரம் உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

தமிழ் மக்களின் அளவு கடந்த பாசம் வியக்க வைக்கிறது: ஹர்பஜான்சிங் நெகிழ்ச்சி

இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் கம்பீரமாக மீண்டும் புத்துணர்ச்சியுடன் களம் புகவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்