தப்பியோடிய அதிமுக எம்.எல்.ஏவின் மணப்பெண் கூறிய காரணம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பவானிசாகர் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ ஈஸ்வரன் என்பவருக்கு 23 வயது சந்தியா என்ற பெண்ணை நிச்சயம் செய்து வரும் 12ஆம் தேதி திருமணம் நடத்த இருவீட்டார் திட்டமிட்டிருந்தனர். இந்த திருமணத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்வதாக கூறப்பட்டிருந்தால் திருமண ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த நிலையில் மணமகள் சந்தியா கடந்த 1ஆம் தேதி திடீரென மாயமானார். அவர் ஒரு இளைஞரை காதலிப்பதாகவும், தனது மகளை அந்த இளைஞரிடம் இருந்து மீட்டு தர வேண்டும் என்றும் சந்தியாவின் தாயார் காவல்துறையினர்களிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சந்தியாவை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று சந்தியாவை திருச்சியில் கண்டுபிடித்த போலீசார் அவரை கோபி நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். நீதிபதி முன் கண்ணீருடன் இருந்த சந்தியா, தனக்கும் ஈஸ்வரனுக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்றும் அப்பா வயது உள்ளவரை எப்படி திருமணம் செய்ய முடியும் என்றும், இந்த திருமணம் பிடிக்காமல் தான் ஓடிப்போனதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து பெற்றோருடன் சந்தியா செல்ல அனுமதித்த நீதிபதி, சந்தியாவை திருமணம் செய்ய பெற்றோர்கள் கட்டாயப்படுத்த கூடாது என்று அறிவுரை கூறினார்.
இந்த நிலையில் தனது திருமணம் திட்டமிட்டபடி அதே தேதியில் வேறொரு பெண்ணுடன் நடக்கும் என்றும் தனது பெற்றோர் பெண் பார்த்து வருவதாகவும் ஈஸ்வரன் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout