கனமழையிலும் கலெக்சனில் களைகட்டிய தளபதியின் 'மெர்சல்'

  • IndiaGlitz, [Monday,November 06 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று ரூ.200 கோடிக்கும் வசூலை பெற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இந்த படத்தின் வசூல் புதிய சாதனை செய்துள்ளது. ரிலீஸ் ஆன அக்டோபர் 18ஆம் தேதியில் இருந்து நேற்று வரை இந்த படம் ரூ.12,13,33,677 கோடி வசூல் செய்து சென்னையில் அதிக வசூலை பெற்ற விஜய் படம் என்ற சாதனையை செய்துள்ளது.

மேலும் கடந்த வாரயிறுதி நாட்களில் இந்த படம் 19 திரையரங்குகளில் 22 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.61,36,754 வசூல் செய்துள்ளது. கனமழையிலும் 85% பார்வையாளர்களுடன் இந்த படத்தின் வசூல் களைகட்டியதால் படக்குழுவினர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

 

 

More News

தமிழகத்துக்காக கையேந்துவதில் வெட்கமில்லை: ரசிகர்களிடையே கமல் ஆவேச பேச்சு

தமிழக நலன்களுக்காக நான் என் ரசிகர்களிடம் 37 ஆண்டுகளாக கையேந்தி வருகிறேன். இங்குள்ள கூட்டம் மன்னர் முன் கையேந்தும் கூட்டமில்லை. தமிழகத்துக்காக கையேந்துவதில் வெட்கமில்லை என்று நான் கருதுகிறேன்.

உலகில் முதல்முறையாக விஷால் எடுத்திருக்கும் ''V Shall' என்ற புதிய முயற்சி

நடிகர் விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலம் நலிந்த நடிகர், நடிகையர் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்துள்ளார் என்பது தெரிந்ததே.

விஜய் ஆண்டனியின் 'அண்ணாதுரை' ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த 'அண்ணாதுரை' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து சமீபத்தில் இந்த படம் சென்சார் செய்யப்பட்டு 'யூஏ' சான்றிதழ் பெற்றது

சின்னத்தல' விராத் கோஹ்லிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கிரிக்கெட் உலகின் தல' தோனி என்றால் சின்னத்தல' விராத் கோஹ்லி என்று கூறலாம். எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாகவும், இந்திய அணியின் ரன் மிஷினாகவும் உள்ள விராத் கோஹ்லிக்கு இன்று பிறந்த நாள்.

கமல்ஹாசனுக்கு ஆதரவாக களம் இறங்கிய கேரள முதல்வர்

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் வார இதழ் ஒன்றில் எழுதிய தொடரில் இந்து தீவிரவாதம் குறித்த தனது கருத்தை தெரிவித்திருந்தார். வழக்கம் போல் இந்து அமைப்புகளும் கமலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.