கல்பனா சாவ்லாவைத் தொடர்ந்து விண்ணிற்கு பறக்கும் இந்திய வம்சாவளி பெண்!
- IndiaGlitz, [Monday,July 05 2021]
சாதனை பெண்மணி கல்பனா சாவ்லாவை அறியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு இந்திய மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியவர். மேலும் விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றவர். அதோடு இரண்டாவது முறை விண்வெளிக்கு பயணம் செய்த இந்திணப் பெண்மணியும் இவர்தான். அப்படி இரண்டாம்முறை தரையிறங்கும்போது கடந்த 2003 ஆம் ஆண்டு இவர் வந்த ராக்கெட் வெடித்து சிதறி அதில் பயணம் செய்த 7 விஞ்ஞானிகள் உயிரிழந்தனர்.
அவர் இந்த உலகைவிட்டு பிரிந்தாலும் கல்பனாவின் சாதனைகளை இந்த உலகம் இன்றைக்கும் பேசிக் கொண்டேதான் இருக்கிறது. இந்தச் சாதனையை தொடர்ந்து இந்தியாவைச் சேர்ந்த வேறு எந்தப் பெண்ணும் விண்வெளிக்கு செல்லவில்லை. இந்நிலையில் ஆந்திரா மாநிலம் குண்டூரை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளிப் பெண் ஷிரிஷா பண்டாலா என்பவர் வரும் 11 ஆம் தேதி விண்வெளிக்கு செல்ல உள்ளார்.
விர்ஜின் கேலடிக் விமான நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் உட்பட 5 பேர் கொண்ட குழு வரும் 11 ஆம் தேதி விண்வெளிப் பயணம் செய்ய இருக்கின்றனர். அந்தக் குழுவில் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஷிரிஷா பண்டாலாவும் இடம்பெற்றுள்ளார். இதனால் அவருக்கு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.