செவிலியர் தினத்தில் மருத்துவப் பணியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை காலத்தில் பணியாற்றி வரும் மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் ஏப்ரல், மே, ஜுன் மாத காலத்தில் தமிழக மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ரூ.30 ஆயிரம், செவிலியர்களுக்கு ரூ.20 ஆயிரம், இதரப் பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார். மேலும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அதோடு கொரோனா சிகிச்சைக்காக பணியாற்றியபோது உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.