கமல் கொடுத்த கிஃப்ட்: மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட அமெரிக்க நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் என்ற பெயருக்கு ஏற்ப நடிகர் கமல்ஹாசனின் புகழ் உலகம் முழுவதும் பரவி உள்ளது என்பது தெரிந்ததே. உலக சினிமா பிரபலங்கள் அனைவரும் கமல்ஹாசனையும் அவரது திறமையையும் அறிந்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில் பிரபல அமெரிக்க நடிகை McKenzie Westmore அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ’பலர் என்னிடம் கமலஹாசனை உங்களுக்கு தெரியுமா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். அவ்வாறு கேள்வி எழுப்பியவர்களுக்கான பதில்தான் இதோ என்று இரண்டு புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ளார்.
முதல் புகைப்படம் கமலஹாசனுடன் இணைந்து எடுத்த புகைப்படமும் இரண்டாவது புகைப்படத்தில் அவர் தனது தந்தையுடன் வித்தியாசமான காஸ்ட்யூமில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதில் முதல் புகைப்படம் கமல்ஹாசனுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்னால் எடுத்துக் கொண்டது என்றும் அதன்பிறகு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இரண்டாவது புகைப்படம் தன்னுடைய தந்தையுடன் இருக்கும் புகைப்படம் என்றும் அந்த புகைப்படத்தில் தான் அணிந்திருக்கும் உடை, கமல் அவர்களால் கிஃப்டாக கொடுக்கப்பட்டது என்றும் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்க நடிகை ஒருவர் கமல்ஹாசன் உடனான தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Many have asked if I know @ikamalhaasan well here ya go :) my dad used to create his makeups when I was a little girl. We keep in touch but the last I saw Kamal was a few years back. The 2nd photo is me and my dad in beautiful clothing given to us as a gift from Kamal ❤️ pic.twitter.com/BxN40imqCx
— McKenzie Westmore (@mckenziewestmor) May 19, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com