திடீர் திருப்பம்: பி.எஸ்.என்.எல் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,March 14 2018]

கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த 2ஜி அலைக்கற்றை வழக்கில் ஆ.ராசா மற்றும் கனிமொழி விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்களான கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு சரியான. முகாந்திரம் இல்லாததால் மாறன் சகோதரர்கள் உள்பட  7 பேரையும் விடுவிப்பதாக சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது சட்டவிரோதமாக அதிவேக உயர் இணணப்புகள் கொண்ட டெலிபோன் எக்சேஞ்ச் கடத்தப்பட்டு அமைச்சரின் சகோதரரான கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் டிவிக்கு  இணைப்புகள்   வழங்கப்பட்டதாக பத்திரிகையாளர் குருமூர்த்தி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த  வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் சென்னை பிஎஸ்என்எல் பொது மேலாளராக பதவி வகித்த கே.பிரம்மநாதன், அந்நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொதுமேலாளர் எம்.பி.வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச்செயலாளராக இருந்த கவுதமன், சன் டிவி ஊழியர்கள் என 7 பேர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுகு முகாந்திரம் இல்லை என்பதால் அவர்கள் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக தீர்ப்பு அளிக்கப்பட்டது.

புதிய தொழில்நுட்பங்களை முழுமையாக புரிந்து கொள்ளாமல் 764 இணைப்புகள் என சிபிஐ வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், பைலட் நம்பர்களில் இருந்து சைல்டு நம்பர்கள் மட்டுமே எடுக்கப்பட்டதாகவும், சைல்டு நம்பர்களை தொலைபேசி இணைப்பாக கணக்கில் கொள்ள முடியாது என்றும் மாறன் சகோதரர்கள் தரப்பில் வாதாட்டப்பட்டதுதான் இந்த  வழக்கின் முக்கிய திருப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விராத்-அனுஷ்கா வாழும் வீட்டின் வாடகை எவ்வளவு தெரியுமா?

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் தேதி இத்தாலியில் நடைபெற்ற விராத் கோஹ்லி, அனுஷ்காவின் திருமணம், இந்திய நட்சத்திரங்களின் மிகச்சிறந்த திருமணங்களில் ஒன்று.

சூர்யாவின் 'NGK' டீசர் எப்போது? தயாரிப்பாளர் தகவல்

நடிகர் சூர்யா நடித்து வரும் 'NGK' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. செல்வராகவன் இயக்கி வரும் இந்த படத்தில் ரகுல்ப்ரித்திசிங் மற்றும் சாய்பல்லவி நடித்து வருகின்றனர்.

ரஜினியிடம் ஆட்டோகிராப் வாங்கிய தாசில்தாரின் அதிரடி முடிவு

ரஜினிகாந்த் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை பல நிகழ்ச்சிகள் நிரூபித்த நிலையில் தற்போது அவர் ஆன்மீகப்பயணமாக சென்றுள்ள இமயமலை பகுதிகளிலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

ஸ்டீபன் தந்த ஞானதானம்: கமல் பெருமிதம்

இங்கிலாந்து நாட்டு இயற்பியல் விஞ்ஞானியும் சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்த கடவுளின் துகள் என்று போற்றப்பட்டவருமான ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலமானார்.

ரஜினியின் பகுதி நேர அரசியல் குறித்து அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்

அரசியல் குறித்த கேள்விகளுக்கும் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள் குறித்த கேள்விகளுக்கும் ரஜினிகாந்த் பதில் அளிப்பதில்லை என்ற விமர்சனங்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.