தல அஜித்தின் 'விசுவாசம்' படத்தில் இணையும் ஆக்சன் கிங்?

  • IndiaGlitz, [Sunday,February 18 2018]

தல அஜித் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜூன் நடித்த 'மங்காத்தா' திரைப்படம் தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று. இந்த படத்திற்கு பின் மீண்டும் 'மங்காத்தா 2' படத்தில் இருவரும் விரைவில் இணையவுள்ளதாக வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் ஆக்சன் கிங் அர்ஜூன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த செய்தி உண்மையானால் மீண்டும் ஒரு மங்காத்தா வெற்றியை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்

ஆக்சன் கிங் அர்ஜூன், 'விசுவாசம்' படத்தில் வில்லன்  கேரக்டரில் நடிக்கின்றாரா? என்பது குறித்த தகவல் இதுவரை இல்லை. இருப்பினும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை அடுத்து அர்ஜூன் இந்த படத்தில் இணைவது படத்தின் எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது.