ரஜினிக்கு ரூ.100 அபராதம் விதித்தது உண்மையா? மாமல்லபுரம் கூடுதல் எஸ்பி விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று திடீரென ரஜினிக்கு ரூபாய் 100 அபராதம் விதிக்கப்பட்டதாகவும், ஜூன் 26ம் தேதி விதிக்கப்பட்ட அபராதத்தை அவர் ஜூலை 23ஆம் தேதி தான் கட்டியதாகவும் செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவின.
இது குறித்து ரஜினியை பிடிக்காதவர்கள் மற்றும் பணத்திற்காக மாரடிக்கும் சமூக வலைத்தள போராளிகள் பல்வேறு மீம்ஸ்களை பதிவு செய்து கிண்டலடித்தனர். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த், ரூபாய் 100 அபராதம் கட்டுவதற்கு ஒரு மாசம் அவகாசம் தேவையா? என்றும், சீட் பெல்ட் அணியாமல் ரஜினிகாந்த் காரில் சென்று விதிகளை மீறி உள்ளார் என்றும், சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என்று கூறும் ரஜினியே சிஸ்டத்தை மீறலாமா? என்றும் வாங்கிய பணத்திற்கு பாதகமில்லாமல் பொங்கி எழுந்தனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மாமல்லபுரம் கூடுதல் எஸ்பி சுந்தரவதனம் அவர்கள் விளக்கம் கூறியதாவது: கடந்த ஜூன் 26ஆம் தேதி நடிகர் ரஜினியின் கார், பழைய மாமல்லபுரம் சாலையில் சென்றது உண்மை. அந்த காரை தாழம்பூர் போலீசார் நிறுத்தி சோதித்ததும் உண்மை. கார் டிரைவர் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததால் அவரிடம் போலீசார் 100 அவதாரம் வாங்கியதும் உண்மை. ஆனால் அந்த காரில் ரஜினி வரவில்லை. டிரைவர் மட்டுமே இருந்தார். அவர் தான் அபராதம் செலுத்தினார் என்று விளக்கமளித்துள்ளார்
இதனையடுத்து இதுகுறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout