தென்கொரிய விமான நிலையத்தில் திடீரெனச் சுருண்டு விழுந்து இறந்த இந்திய மாணவி- பரபரப்பு தகவல்!!!

  • IndiaGlitz, [Saturday,August 29 2020]

 

தென்கொரியாவில் ஆராய்ச்சி மாணவியாக படித்துவரும் கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தென்கொரிய விமான நிலையத்தில் திடீரென சுருண்டு விழுந்து இறந்துள்ளார். இதனால் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தைச் சார்ந்த ஜோஸ்-ஷெர்லி தம்பதியினரின் மகளான லீஜா ஜோஸ் தென்கொரிய பல்கலைக் கழகம் ஒன்றில் கடந்த 4 ஆண்டுகளாக ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் விடுமுறைக்காக கடந்த ஆண்டு இறுதியில் இந்தியா வந்ததாகக் கூறப்படுகிறது. பிப்ரவரி மாதம் தனது படிப்பை தொடர மீண்டும் தென்கொரியாவிற்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால் விமானப் போக்குவரத்து தடையால் காலம் தாழ்த்தி இந்தமாதம் தென்கொரியாவிற்கு லீஜா சென்றிருக்கிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு காதுவலி, முதுவலி போன்ற பிரச்சனைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

உரிய சிகிச்சைக் கிடைக்காமல் லீஜா மீண்டும் இந்தியாவிற்கே சென்று விடலாம் என்று முடிவெடுத்து விமான நிலையதிற்கு வந்திருக்கிறார். அப்படி வந்த லீஜா சில தினங்களுக்கு முன்பு தென்கொரிய விமான நிலையத்தில் திடீரெனச் சுருண்டு விழுந்ததாகக் கூறப்படுகிறது. அங்குள்ள அதிகாரிகள் உடனடியாக பக்கத்தில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்து இருக்கின்றனர். மருத்துவர்கள் சோதனையில் அவர் இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். இதனால் உடனடியாக உறவினர்களுக்குத் தகவல் கொடுக்கப் பட்டு இருக்கிறது.

தற்போது உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவி என்ன காரணத்தினால் உயிரிழந்தார் என்பதைக் குறித்து கடும் குழப்பம் நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.