கொரோனா அச்சம்.. ஒரு ஊரே வீட்டுக்குள்ளே முடங்கிக்கிடக்கும் அவலம்..!
- IndiaGlitz, [Wednesday,March 04 2020]
ஹைதராபாத்தில் உள்ள மகேந்திர மலைகளும் அதை சுற்றியிருக்கும் ஊர்களில் உள்ள குடியிருப்புகளில் வாழும் மக்கள் கொரோனா அச்சம் காரணமாக வீட்டை விட்டு கூட வெளியே வராமல் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த பகுதியில் வாழ்ந்து வந்த 24 வயது இளைஞர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் வைரஸ் தங்களுக்கும் வந்துவிடுமோ எனும் அச்சத்தில் அங்கு வசிக்கும் பிற மக்கள் வீடுகளை விட்டே வெளியே வராமல் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள தெருக்கள் வீடுகள் எல்லாம் மிக அமைதியாக எதோ கைவிடப்பட்ட நகரம் போல் காட்சியளிப்பதாக ஹைதராபாத் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. அரசானது மக்களிடம் இருந்து அச்சத்தைப் போக்க எல்லாவித நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மேலும் அங்குள்ள பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
வைரஸின் அறிகுறி சிறிதளவு தெரிந்தாலும் உடனே தெரிவிக்க வேண்டும் என அரசு சார்பில் அங்குள்ள மக்களுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது, மாஸ்க்குகள் வழங்குவது என அங்குள்ள அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு வருகின்றனர்.