கருணாநிதிக்கு இசையஞ்சலி செலுத்திய ஏ.ஆர்.ரஹ்மானின் மாணவர்!

  • IndiaGlitz, [Wednesday,April 03 2019]

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த தி வேல்ட்ஸ் பெஸ்ட் என்ற ரியாலிட்டி ஷோவில் சென்னையை சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மாணவர் லிடியன்நாதஸ்வரம் கலந்து கொண்டு அதிவேகமாக பியானோ வாசித்து தி வேல்ட்ஸ் பெஸ்ட் என்ற பட்டம் பெற்றார்.

இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு லிடியன் நாதஸ்வரம் இசையஞ்சலி செலுத்தியுள்ளார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு தனது குடும்பத்தினர்களுடன் வந்த லிடியன், கருணாநிதியின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது புகைப்படத்திற்கு முன் நின்று அரை மணி நேரம் பியானோ வாசித்து இசையஞ்சலி செலுத்தினார்.

இந்த இசையஞ்சலியின்போது திமுக மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் மற்றும் கருணாநிதி குடும்பத்தினர் உடன் இருந்தனர். கருணாநிதிக்கு இசையஞ்சலி செலுத்திய லிடியனுக்கு தயாநிதி மாறன் திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கினார்.