வாசனை மற்றும் சுவை உணர்வை இழத்தல் கொரோனா அறிகுறியா??? ஆய்வு முடிவுகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா அறிகுறிகளாக இதுவரை வறட்டு இருமல், சளி, காய்ச்சல் போன்றவையே சொல்லப்பட்டு வந்தன. தற்போது கொரோனா வைரஸ் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருப்பதால் இந்த வைரஸ் ஏற்படுத்தும் சில புதிய அறிகுறிகளையும் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். மற்ற வைரஸ் அறிகுறிகளைப் போன்றே கொரோனா SARS-Covid-2 வினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பலரும் பலவிதமான அறிகுறிகளைக் கொண்டிருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. மூச்சுத்திணறல், தொண்டை புண் ஆகியவை கொரோனாவின் முக்கிய அறிகுறிகளாக இதுவரை அறியப்பட்டு வந்த நிலையில் தற்போது நோயாளிகள் வாசனையை (Anosmia) அறியும் திறனை இழந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், சிலர் தங்களது சுவை (Ageusia) உணரும் திறனையும் இழந்திருக்கின்றனர்.
சீனா, ஈரான், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள நோயாளிகளுக்கு இதுபோன்ற அறிகுறிகள் இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. British Otorhinolaryngology (ENT UK) இதை உறுதிப்படுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், வாசனை அல்லது சுவையுணர்வு இழப்பு ஏற்பட்டால் உங்களுக்கு கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என்று தற்போது இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்களும் எச்சரித்துள்ளனர். London Kings பல்கலைக்கழகம் இந்த ஆராயச்சிக்காக கொரோனா பாதித்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் சோதனையை மேற்கொண்டது. அந்த ஆய்வு முடிவு தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.
கொரோனா நோயாளிகள் 53% பேருக்கு சோர்வு ஏற்பட்டு இருக்கிறது
29% பேருக்கு இருமல் தொல்லைகள் இருக்கின்றன
28% பேர் மூச்சுத்திணறல் பிரச்சனையைச் சந்தித்து வருகின்றனர்
18% பேர் வாசனை அல்லது சுவை உணர்வை இழந்திருக்கின்றனர்
10.5% பேர் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இந்த ஆய்வு முடிவில் இருந்து ஐந்து மூன்றில் சதவீதம் பேருக்கு தற்போது வாசனை அல்லது சுவை உணர்வு இல்லாமல் இருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆனாலும் சாதாரண காய்ச்சல் மற்றும் சளி அறிகுறிகளின்போதும் வாசனையை இழத்தல் அல்லது சுவை உணர்வை இழத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே இங்கிலாந்து பொது சுகாதாரம் மற்றும் உலக சுகாதார அமைப்புகள் இந்த அறிகுறிகளை கொரோனா அறிகுறிகளின் பட்டியலில் இன்னும் இணைக்காமல் வைத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments