அப்பாக்களின் தினம்… இறுக்கத்தை விட்டு vaarta உடன் கொண்டாடுங்கள்!

  • IndiaGlitz, [Friday,June 18 2021]

ஒவ்வொரு குடும்பத்திலும் அப்பா எனும் ஒரு நபர் அந்த குடும்பத்தின் தூணாகவே இருந்து செயல்படுகிறார். அந்த அப்பா, தன்னைப் பற்றி சிந்திப்பதைக் காட்டிலும் அந்த குடும்பத்தின் வளர்ச்சிக்காகவும் வாரிசுகளின் வளர்ச்சிக்காகவும் ஓயாது உழைத்துக் கொண்டே இருக்கிறார். இப்படி இருந்தும் அந்த அப்பாவை பற்றி ஒவ்வொரு மகனும் மகளும் குறை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம்.

அதற்கு காரணம் அந்த அப்பா, எப்போதும் இறுக்கமாகவே நம்மிடம் பழகுவதாக ஒரு பிரம்மை. இந்த பிரம்மையில்தான் அப்பாக்களின் ஆசையான வார்த்தைகளையும் அக்கறையையும் தொலைத்து விடுகிறோம். இப்படி அப்பாக்களின் அருமையை தொலைத்துவிட்டு நிற்கிற ஒவ்வொரு மகனும் மகளும் அப்பாக்களின் தினத்தில் அவருடைய அருமையைப் பற்றி, அனுபவங்களைப் பற்றி சொந்த குரலில் பதிவிட்டு வார்த்தா ஆப்புடன் கொண்டாடுங்கள்.

இதற்கான வாய்ப்பினை vaarta ஆப் ஏற்படுத்திக் கொடுக்கிறது. எனவே அப்பா கூறிய அறிவுரையோ, மறக்க முடியாத அனுபவமோ அல்லது இதுவரை சொல்லத் தவறிய எதையும் இந்த ஆப்பில் பதிவிட்டு உங்கள் தந்தைக்கு மரியாதை செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் மனதில் இருக்கும் விஷயத்தையும் அவருக்கு தெரிவித்து விடுங்கள்.

தந்தையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதத்தில் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. வரும் ஜுன் 20 ஆம் தேதி தந்தையர் தினம் என்பதால் இறுக்கத்தைத் விட்டு இனிமையான அப்பாக்களின் தினத்தைக் கொண்டாடி மகிழ்வோம்.