விஜய் சைக்கிளில் வாக்களிக்க வந்தது ஏன்? குஷ்பு கூறிய விளக்கம்!

  • IndiaGlitz, [Tuesday,April 06 2021]

இன்று காலை 7 மணி முதல் தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு சில நிமிடங்களில் வாக்குப்பதிவு நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று காலை நீலாங்கரை வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார். அவர் சைக்கிளில் வந்தது ஏன் என்பது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வந்தன என்பதும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது தரப்பினர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது ஏன் என்பது குறித்த விளக்கத்தை அளித்தார் என்பதும் தெரிந்ததே

விஜய்யின் வீடு அருகில்தான் பூத் இருந்தது என்பதாலும் அந்த பூத் உள்ள தெருவில் கார் செல்ல முடியாது என்பதும் அவர் சைக்கிளில் சென்றதாக விஜய் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டது. இருப்பினும் விஜய் சைக்கிள் வந்தது வந்தது குறித்து பல்வேறு கட்சி தலைவர்களும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்

இந்த நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்பு இதுகுறித்து கூறுகையில் ’விஜய் நேரத்தை வீணாக்க கூடாது என்பதற்காகவே சைக்கிளில் சென்றிருப்பார், விஜய் சைக்கிளில் சென்றதை அரசியலாக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்

More News

பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைஃபுக்கு கொரோனா தொற்று!

பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைப் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்துக் கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 

வாக்களிக்க வந்த சிம்புவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு!

தமிழகத்தில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் இன்று காலை 7 மணி முதல் வாக்களித்து வருகின்றனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன்,

அஜித் கோவப்பட்டது ஏன்? விரிவான தகவல்

தல அஜித் இன்று திருவான்மியூர் வாக்குப்பதிவு மையத்தில் தனது மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இன்று ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரையுலக பிரபலங்கள்: புகைப்பட தொகுப்பு

தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வாக்களித்தனர்

கோவை தெற்கில் கூட்டு சேர்ந்த காங்கிரஸ்,மநீம,நாதக...! பாஜகவுக்கு பளார்...!

கோவை தெற்கு தொகுதியில், பாஜவினர் டோக்கன் தந்து அதற்கு பணம் கொடுப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.