தமிழகப் பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பிரதமர் மோடி எழுப்பிய முக்கிய கேள்வி?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தைச் சார்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரிடம் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் ஒரு முக்கியக் கேள்வியை எழுப்பி இருக்கிறார். அதில் இன்ஜினியரிங் படித்துவிட்டு காவல் அதிகாரியாக மாற ஏன் முடிவு எடுத்தீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது ஐத்ராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்த வகுப்பில் தமிழகத்தைச் சார்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் ஸ்ருதியும் இடம் பெற்றிருக்கிறார். இந்நிலையில் பயிற்சி பெற்றுவரும் இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் பிரதமர் காணொலி வாயிலாக பேசினார். அப்போது தமிழகத்தைச் சார்ந்த ஐபிஎஸ் அதிகாரியாக பயிற்சி பெறும் கிரண் ஸ்ருதியிடம் பிரதமர் இன்ஜினியரிங் படித்து விட்டு ஏன் ஐபிஎஸ் வேலையைத் தேர்ந்தெடுத்தீர்கள் எனக் கேட்டிருக்கிறார்.
பிரதமரின் கேள்விக்கு பதில் அளித்த கிரஸ் ஸ்ருதி சீருடை அணிந்து மக்களுக்கு சேவையாற்ற பெற்றோர் விரும்பியதால் ஐபிஎஸ் அதிகாரியாக விரும்பினேன் எனக்கூறி பெருமைப்பட்டு இருக்கிறார். மேலும் இந்தியாவின் முதல் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடியைப் போலவே வரவேண்டும் என்று தன்னுடைய பெற்றோர்கள் இந்த பெயரை வைத்ததாகவும் தெரிவித்து இருக்கிறார்.
அவரது பதிலுக்கு பாராட்டுத் தெரிவித்த மோடி இளம் ஐபிஎஸ் வீரர்கள் பதட்டம் அடையாமல் தங்களது பணியைத் தொடர யோகா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள அதிகாரிகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். உங்கள் சீருடையால் நீங்கள் பெருமைப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். மரியாதையை ஒருபோதும் இழக்காதீர்கள் எனவும் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments