சென்னையில் கேரள போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Saturday,September 29 2018]

சென்னை விருகம்பாகத்தில் கேரள போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த மகாராஜா என்பவர் கேரளாவில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து அவர் மீது ஏராளமானோர் காவல்துறையினர்களிடம் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் மகாராஜாவிடம் விசாரணை நடத்த போலீசார் முயன்றபோது அவர் சென்னைக்கு தப்பிவந்துவிட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து சென்னை வந்த கேரள போலீசார் மகாராஜாவை கையும் களவுமாக பிடித்து அவரை கைது செய்ய முயன்றனர். ஆனால் மகாராஜா உறவினர்கள் அவரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களை மிரட்ட கேரள போலீசார் வானத்தை நோக்கி சுட்டனர். அதன்பின்னர் மகாராஜாவை கேரள போலீசார் அழைத்து சென்றனர். கேரள போலீசார் வானத்தை நோக்கி சுட்டது குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.