கொரோனா வைராஸால் பாதிக்கப் பட்டாரா? கேரள நர்ஸ் – சவுதி சுகாதார அதிகாரி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னதாக, தென்மேற்கு சவுதி அரேபியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கேரளாவைச் சேர்ந்த ஒரு செவிலி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வெளிவிவகார துறை அமைச்சர் வி. முரளீதரன் தெரிவித்து இருந்தார். தற்போது அந்த செவிலி கொரோனா வைரஸால் பாதிக்கப் படவில்லை என்பதை அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.
சவுதியின் தென் மேற்கு மருத்துவமனை ஒன்றில் கேரளாவை சேர்ந்த 100 செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். வைரஸ் தொற்று அச்சுறுத்தலைத் தொடர்ந்து அந்த செவிலியர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றதாகவும் அதில் ஒருவருக்கு நோய் தொற்று இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் சவுதியில் உள்ள கேரள செவிலியர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து தருமாறு வெளியுறவு துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
தற்போது, சவுதி சுகாதார அமைச்சகத்தின் துணை நிறுவன அதிகாரி ஒருவர் இந்திய செவிலி கொரோனா வைரஸால் பாதிக்கப் படவில்லை என உறுதி செய்து இருக்கிறார். மேலும், இந்தியர் யாரும் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டதாக வழக்குகள் இல்லை எனத் தெரிவித்தார்.
இதை ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தனது டிவிட்டல் பதிவில் கேரள செவிலி கொரோனா வைரஸால் பாதிக்கப் படவில்லை (2019-NCoV) என்றும் MERS-CoV பாதிப்பு மட்டுமே அவருக்கு இருப்பதாகவும் பதிவிட்டுள்ளது.
சீனாவின் வுஹான் மகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸால் இது வரை 900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 25 பேர் இறந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் தன்மை கொண்டது என உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த வைரஸ் தொற்றினால் அமெரிக்காவில் ஒருவர் பாதிக்கப் பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு இருக்கிறார். மேலும் ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்திலும் இந்த கொரோனா வைரஸ் தொற்றுகள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. எனவே பல நாடுகள் சவுதியில் இருந்து திரும்பும் பயணிகளைக் கடும் மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே தங்களது நாட்டுக்குள் அனுமதிக்கின்றனர்.
இந்தியாவிலும் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற விமான நிலையங்களில் சவுதியில் இருந்து திரும்பும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுமாறு Civil Aviation ministry கேட்டுக் கொண்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout