போதையில் 6 வயது மகளையே கோடாரியால் வெட்டிய தந்தை … கேரளாவில் கொடூரம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரள மாநிலத்தில் போதையில் இருந்த தந்தை ஒருவர் தனது இரண்டாவது திருமணத்திற்கு தடையாக இருந்த 6 வயது மகளை கோடாரியால் வெட்டிக்கொன்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மேலும் அதைத் தட்டிக் கேட்ட சொந்த தாயையும் அவர் தாக்கியதால் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் மாவேலிக்கரை அடுத்த புன்னமூடு பகுதியில் வசித்துவந்தவர் மகேஷ். 38 வயதான இவர் வெளிநாட்டில் வேலைப் பார்த்துவந்த நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் அவருடைய மனைவி வித்யா தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து சொந்த ஊருக்கு திரும்பிய மகேஷ் தனது மகள் மற்றும் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மகேஷின் அப்பாவும் ஒரு ரயில் விபத்தில் உயிரிழந்த நிலையில் தாய் சுனந்தா (62) மகள் நட்சத்திரா (6) இவர்களுடன் மகேஷ் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, தாய் சுனந்தா பக்கத்து வீட்டிற்கு சென்றிருந்த போது குடிபோதையில் இருந்த மகேஷ் தனது சொந்த மகளையே கோடாரியால் வெட்டியுள்ளார். இதையடுத்து கழுத்தில் வெட்டுக்காயம் பட்ட சிறுமி, ரத்த வெள்ளத்தில் அருகில் இருந்த ஷோபாவில் சரிந்துள்ளார்.
இந்தச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் திரண்டு மகேஷை தடுக்க முயன்றிருக்கின்றனர். மேலும் மகேஷின் தயார் சுனந்தா, மகேஷை தடுக்க முயன்றபோது அவரையும் வெட்டியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த நட்சத்திரா மற்றும் சுனந்தாவை மாவேலிகரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் வெட்டுக்காயம் பட்ட சிறுமி நட்சத்திரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் வெட்டுக்காயம் பட்ட சுனந்தாவிற்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் முதல் மனைவி தற்கொலை செய்துகொண்ட நிலையில் மகேஷ் இரண்டாவது திருமணம் செய்வதற்காக பல இடங்களில் பெண் பார்த்துள்ளார். ஆனால் அவருக்கு 6 வயதில் மகள் இருப்பதால் யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை என்றும் இதனால் சிறுமி மீது கோபத்தில் இருந்த தந்தை மகேஷ் அவரை வெட்டிக் கொன்றிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட மகேஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com