டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் முதல் மலையாள வெப் சீரிஸ்.. டிரைலரை ரிலீஸ் செய்த மோகன்லால்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
’கேரளா கிரைம் ஃபைல்ஸ் - ஷிஜு பறயில் வீடு நீடித்தகரா’ என்ற மலையாள வெப்சீரிஸ் டிஸ்னி ஹாட் ஸ்டார் இல் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த வெப் சீரிஸ் டிரைலரை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியிட்டார்.
பிக்பாஸ் சீசன் 5 அரங்கில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில் மோகன்லால் இந்த ட்ரைலரை வெளியிட்ட நிலையில் இந்த ட்ரெய்லர் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ட்ரெய்லர் ரிலீஸ் விழாவின்போது முன்னணி நடிகர்களான அஜு வர்கீஸ் மற்றும் லால் உள்பட பலர் இருந்தனர்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளில் இந்த வெப் சீரிஸ் ஜூன் 23ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாலியல் தொழிலாளியின் கொலை குறித்து விசாரணை செய்யும் அதிகாரி குற்றவாளியை கண்டுபிடித்தாரா? என்பது தான் இந்த வெப் சீரிஸின் கதை என்பது குறிப்பிடத்தக்கது. ஆஷிக் ஐயனார் திரைக்கதையில் ஒளிப்பதிவில் இந்த வெப் சீரிஸ் உருவாகியுள்ளது.
ஹேஷாம் அப்துல் வஹாப் பின்னணி இசையில், ஆஷிக் அய்மர் திரைக்கதையில், ஜிதின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸை ஃபர்ஸ்ட் பிரிண்ட் ஸ்டுடியோவின் கீழ் ராகுல் ரிஜி நாயர் தயாரித்துள்ளார். அகமது கபீரின் இயக்கத்தில் உருவாகியுள்ள "கேரளா கிரைம் ஃபைல்ஸ் - ஷிஜு, பாறையில் வீடு, நீண்டகரை" நிச்சயம் ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments