எனக்கே பாவமா இருக்குது: பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் குறித்து கஸ்தூரி
Send us your feedback to audioarticles@vaarta.com
திரையுலகை பொருத்தவரையில் பாலியல் தொல்லை அனுபவம் பெறாத நடிகைகளே மிகவும் குறைவு என்று கூறலாம். ஒருசிலர் இதனை துணிவுடன் எதிர்கொண்டு வெற்றி கொண்டுள்ளனர். ஒருசிலர் தங்களையும் இழந்து வாய்ப்பையும் இழந்து புலம்பு வருகின்றனர்,.
அந்த வகையில் தனக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகளை தைரியமாக எதிர்த்ததாகவும், தன்னிடம் தவறாக நடக்க முயன்ற ஒருவரை தான் செருப்பால் அடித்ததாகவும் நடிகை கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தயக்கமில்லை. பரிதாபம். ஏற்கனவே என்கிட்டே செருப்படி வாங்கிட்டு இன்னிக்கு வரை பொது இடத்துல என்னை பாக்கும் போதெல்லாம் எதுவுமே நடக்காதமாதிரி மழுப்பற சிலர். இறந்துவிட்ட ஒருவர், இழுத்துக்கொண்டு ஒருவர். இவங்களை பத்தி இப்போ பேசுறதுக்கு எனக்கே பாவமா இருக்கு' என்று கூறியுள்ளார்.
கஸ்தூரி கூறிய இந்த தகவலை அடுத்து கஸ்தூரியிடம் செருப்படி வாங்கியவர் யார்? செத்தது யார்? இழுத்து கொண்டிருப்பவர் யார்? என்பது குறித்த ஆராய்ச்சியில் டுவிட்டர் பயனாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments