காஷ்மீர் விவகாரத்தால் திரையுலகினர்களுக்கு கிடைத்த லாபம்: பிரதமர் மோடி
Send us your feedback to audioarticles@vaarta.com
காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து 370வது பிரிவு நீக்கப்பட்டு விரைவில் லடாக் மற்றும் ஜம்முகாஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படவுள்ளது. இதற்கான மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்றிரவு வானொலியில் பேசிய பிரதமர் மோடி, 'இனி காஷ்மீரில் தமிழ், தெலுங்கு இந்தி உள்பட இந்திய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் அதிகம் நடக்கும் பகுதியாக மாறும் என்றும் உலக சினிமாவும் இனி காஷ்மீரை நோக்கி வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்பட பல விஷயங்கள் காரணமாக காஷ்மீரில் மிக அரிதாகவே படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இனிமேல் அதிக தமிழ் உள்பட இந்திய சினிமா படப்பிடிப்புகள் காஷ்மீரில் நடைபெறும் என்பதால் பெரும்பாலான திரையுலக பிரபலங்கள் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments