உடம்புல ரத்தம் சூடா இருக்குற வரைக்கும் தான் சண்டை செய்ய முடியும்: கருப்பர் நகரம் டீசர்..!

  • IndiaGlitz, [Thursday,November 09 2023]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’அறம்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் கோபி நயினார் அடுத்த படம் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் டைட்டில் ’கருப்பர் நகரம்’ என வெளியானது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் ’கருப்பர் நகரம்’ படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜேடி சக்கரவர்த்தி, ஈஸ்வரி ராவ், ஜான்விஜய், டேனியல், சூப்பர் சுப்பராயன், கல்லூரி வினோத், தீபா உள்பட பலர் நடித்த இந்த படத்தை கோபி நயினார் இயக்கியுள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவில், கோபி கிருஷ்ணா படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு கேஎஸ் பிரசாத் என்பவர் இசையமைத்துள்ளார். வரும் பிப்ரவரி மாதம் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டீஸரில் ’உலகம் முழுவதும் ஒரே சண்டை தான் வேளாங்கண்ணி, 100 பேர் பாடுபட்டத ஒருத்தன் திங்கறதா, இல்ல 100 பேர் பாடுபட்டு 100 பேர் பங்கு போட்டுக்கிறதா என்பதுதான், உடம்புல ரத்தம் சூடா இருக்கிற வரைக்கும் தான் சண்டை செய்ய முடியும், உன் உடம்பில் ரத்தம் சூடா இருக்கு, நீ தான் செய்யணும்’ என்ற வசனத்துடன் முடியும் இந்த டீசர் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது

கோபிநாயகரின் ’அறம்’ போலவே ’கருப்பர் நகரம்’ படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கமல் சார் உங்க டீமா? மறைமுகமாக கேட்ட தினேஷ்..! மாயாவின் அபார நம்பிக்கை..!

பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் கமல்ஹாசன் மீதே தற்போது  மாயா கேங்கிற்கு பயமில்லாமல் போய்விட்டது என்பது அவர்கள் பேசும் பேச்சில் இருந்து தெரிய வருகிறது.

எத்தனை ஹிட் கொடுத்தோம் என்பது முக்கியமில்லை.. மீண்டு வருவது தான் முக்கியம்: சமந்தா எமோஷனல் பதிவு..!

திரையுலகில் ஒரு நடிகரோ நடிகையோ எத்தனை ஹிட் கொடுத்தார்கள் என்பது முக்கியமில்லை, கஷ்டங்களில் இருந்து அவர் மீண்டு வந்தாரா என்பது தான் முக்கியம் என நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

விறுவிறுப்பாக நடைபெறும் 'துருவ நட்சத்திரம்' பிசினஸ்: படக்குழுவினர் மகிழ்ச்சி..!

விக்ரம் நடிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில்  இந்த படத்தில் ஏராளமாக பிரச்சனை இருந்ததாகவும் தற்போது

ரெட் கார்டு கொடுத்ததற்கு நாங்க காரணமல்ல, கமல் சார் தான் காரணம்.. திடீர் பல்டி அடிக்கும் பூர்ணிமா

 பிரதீப் பிக்பாஸ் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்று கமல்ஹாசன் கேட்ட கேள்விக்கு அனைவரும் ஆமாம் என்று கூறி ரெட் கார்டை தூக்கினார்கள். அதனால் தான் கமல்ஹாசன் பிரதீப்பை வீட்டை

'விடாமுயற்சி' படப்பிடிப்பு.. அஜித் எடுத்த அதிரடி முடிவு..!

அஜித் நடித்து வரும்  'விடாமுயற்சி' என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பில் அஜித், த்ரிஷா உட்பட படக்குழுவினர் கலந்து