மருத்துவமனையில் கபில்தேவ்: வைரலாகும் புகைப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்தியாவுக்காக முதன்முதலில் உலக கோப்பையை பெற்று தந்தவருமான கபில்தேவ் நேற்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான மாரடைப்பு இருந்ததாகவும் இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கபில்தேவ் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் அவர் விரைவில் முழுமையாக குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் கபில்தேவ் உடன் விளையாடிய பிரபல கிரிக்கெட் வீரர் சேட்டன் சர்மா தனது சமூக வலைதளப் பக்கத்தில் மருத்துவமனையில் கபில்தேவ் நலமுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து அவர் நலமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் இரண்டு கைகளையும் தூக்கி ஒற்றை விரலை காட்டும் கபில்தேவ் அருகில் அவரது மகள் உள்ளார் என்பதும், இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது கபில்தேவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முடிந்து நலமுடன் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதால் கோடிக்கணக்கான ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் கபில்தேவ் தனது டுவிட்டர் பக்கத்தில் தான் நலமுடன் இருப்பதாகவும் தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நலம் என்றும் தெரிவித்துள்ளார்
— Kapil Dev (@therealkapildev) October 23, 2020
Kapil Pa ji is OK now after his operation and sitting with his daughter AMYA. Jai mata di.@therealkapildev ???????? pic.twitter.com/K5A9eZYBDs
— Chetan Sharma (@chetans1987) October 23, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments