கமல் முதல்வர் ஆவது ஷங்கர் கையில்தான் உள்ளது. செல்லூர் ராஜூ

  • IndiaGlitz, [Saturday,November 04 2017]

தமிழக அமைச்சர்களில் செல்லூர் ராஜூ அளவுக்கு சமூக வலைத்தளங்களில் யாரும் கலாய்க்கப்பட்டிருக்க மாட்டார் என்பது தமிழக மக்கள் அறிந்ததே. அவரது தெர்மோகோல் முயற்சி முதல் மதுசூதனை முன்னாள் முதல்வர் என்று கூறியது வரை பல சொதப்பல்களை உதாரணமாக கூறலாம்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ கமல்ஹாசனை கலாய்த்துள்ளார். கமல்ஹாசன் முதல்வராக வேண்டும் என்றால் அது ஷங்கர் படத்தில் மட்டும்தான் முடியும் என்று கூறியுள்ளார்.

ஷங்கர் இயக்கிய 'முதல்வன்' படத்தில் அர்ஜூன் ஒருநாள் முதல்வராக நடித்திருப்பார். அதேபோல் ஷங்கரின் படத்தில் கமல் நடித்தால் அதில் அவர் முதல்வராக நடிக்கலாம் என்ற அர்த்தத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். அமைச்சர் கூறியபடி சினிமாவில் மட்டும்தான் கமல் முதல்வர் ஆவாரா? அல்லது வரும் 2019ஆம் தேர்தலில் வெற்றி பெற்று நிஜ முதல்வராக கமல் மாறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

கமல்-ஷங்கர் இணையும் 'இந்தியன் 2' படத்தின் இசையமைப்பாளர் இவரா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மற்றும் மணிரத்னம் இயக்கும் படங்கள் என்றாலே அதன் இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்பதை சின்னக்குழந்தை கூட சொல்லிவிடும்.

விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு: நன்றி கூறிய நடிகர் ஜெய்

தளபதி விஜய் நடித்த அதிரடி ஆக்சன் படமான 'பகவதி' எந்த அளவுக்கு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது என்பதை சொல்ல தேவையில்லை. இந்த படத்தில் விஜய்யின் தம்பியாக நடிகர் ஜெய் நடித்திருந்தார்

மதுசூதனன் முன்னாள் முதலமைச்சரா? செல்லூர் ராஜூவின் அடுத்த உளறல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக அமைச்சர்கள் அவ்வபோது கொடுக்கும் பேட்டியிலும், பொதுக்கூட்டங்களில் பேசிவரும் பேச்சுகளிலும் உளறல்கள் இருப்பதை அவ்வபோது

தீவிரவாதம் என்றால் என்ன? கமல் கருத்துக்கு அரவிந்தசாமி விளக்கம்

கமல்ஹாசன் சமீபத்தில் தெரிவித்த இந்து தீவிரவாதம் குறித்த கருத்துக்கு பாஜக, மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உபி மாநிலத்தில் அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாப்பிட்ட சோறுக்கு நன்றி செய்வேன்: விவசாயிகள் சங்க கூட்டத்தில் கமல் பேச்சு

உலகநாயகன் கமல்ஹாசன் டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை உடைக்கும் வகையில் அவர் சமீபத்தில் எண்ணூரில் ஆய்வு மேற்கொண்டார்