நவம்பர் 7ல் கமல் இதைத்தான் செய்ய போகிறாரா?

  • IndiaGlitz, [Thursday,October 26 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் நவம்பர் 7ஆம் தேதி அதாவது அவருடைய பிறந்த நாள் அன்று முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக வெளிவந்த செய்தியை காலையில் பார்த்தோம். அவர் அந்த நாளில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி நவம்பர் 7 அன்று அவர் ஒரு புதிய செயலியை தொடங்கவுள்ளதாகவும், அந்த செயலி மூலம் தனது நற்பணி இயக்கத்தினர்களும், பொதுமக்களும் இணைக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த செயலி மூலம் மக்களுடன் தங்கள் நற்பணி இயக்கத்தினர் நெருக்கமாக வாய்ப்பு உள்ளதாகவும், அரசியலுக்கு வருமுன் தங்களுடைய கொள்கைகள், கருத்துக்கள் மக்களிடம் முதலில் போய் சேர வேண்டும் என்பதற்காகவே இந்த செயலி தொடங்கப்படுவதாக கூறப்படுகிறது. படிப்படியான களப்பணிகளுக்கு பின்னர் அரசியல் கட்சி தொடங்க கமல் திட்டமிட்டிருப்பதாக அவருடைய வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

நிஜ வாழ்க்கையில் நடிக்காமல் இருப்பது ஏன்? 2.0 பிரஸ்மீட்டில் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை பிரமாண்டமாக துபாயில் நடைபெறவுள்ள நிலையில் சற்று முன்னர் சர்வதேச பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

'பிக்பாஸ்' ஆரவ் படத்தை இயக்கும் சிம்பு பட இயக்குனர்

சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத வகையில் ஆரவ் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

மெர்சல் சென்சார் சான்றிதழ் திரும்ப பெறப்படுமா? நாளை நீதிமன்றத்தில் விசாரணை

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் மத்திய அரசின் திட்டங்களான ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த வசனங்களுக்கு தமிழக பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நவம்பர் 7ல் முக்கிய அறிவிப்பு: கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே பரபரப்பான அரசியல் கருத்துக்களை டுவிட்டரிலும் பேட்டியிலும் கூறி வந்தார். அவருடைய விமர்சனத்திற்கு தமிழக முதல்வரும் தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி, கமலை விட விஜய்யின் உள்கட்டமைப்பில் பலம் அதிகம்: எஸ்.வி.சேகர்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ள நிலையில் இந்த படம் குறித்து கருத்து தெரிவிக்காத அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்களே இல்லை என்று கூறலாம்