காஜல் டூ காஜல்… ஹபிக்கு முத்தம் கொடுத்து நடிகை காஜல் அகர்வால் துவங்கிய புது நிறுவனம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்துவரும் நடிகை காஜல் அகர்வால் அழகுசாதன நிறுவனம் ஒன்றைத் துவங்கியுள்ளார். இதுகுறித்த தகவல் தற்போது சமூகவலைத் தளங்களில் கவனிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் 'பழனி' திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்தார். அதேபோல தெலுங்கு, இந்தி மொழி சினிமாக்களிலும் நடித்துவந்த இவர் க்யூட்டான ரியாக்சன் மற்றும் துள்ளலான நடிப்பு காரணமாகத் தொடர்ந்து வரவேற்பு பெற்றுவருகிறார்.
நடிகை காஜல் கொரோனா காலக்கட்டத்தில் தொழிலதிபர் கௌதம் கிட்சிலு என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு தற்போது ஒரு மகன் இருக்கிறார் என்பதும் தொடர்ந்து நடிகை காஜல் அகர்வால் சினிமாவில் கவனம் செலுத்திவருகிறார் என்பதும் ரசிகர்கள் அறிந்ததுதான். திருமணத்திற்கு முன்பேயே உலகநாயகன் நடிப்பில் உருவாகிவரும் 'இந்தியன் 2' சினிமாவில் அவர் ஒப்பந்தமாகயிருந்தார். அதேபோல 'கருங்காப்பியம்', 'கருடா' போன்ற திரைப்படத்திலும் ஒருசில தெலுங்கு சினிமாவிலும் அவர் தற்போது நடித்துவருகிறார்.
சினிமாவைத் தவிர சோஷியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருந்துவரும் நடிகை காஜல் அகர்வால் தற்போது TAC பியூட்டிஃபுல் ஐ காஜல் எனும் பெயரில் புது பிராண்ட் நிறுவனம் ஒன்றைத் துவங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் துவக்க விழாவின்போது தனது கணவர் கவுதம் கிட்சிலுவிற்கு முத்தம் கொடுத்த நடிகை காஜல் அகர்வால் அவர் இல்லாமல் இது சாத்தியமில்லை என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்நிலையில் தற்போது நடிகை காஜல் அகர்வாலில் புதிய காஜல் நிறுவனத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளையும் வரவேற்பையும் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments