முதல்முறையாக இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான், ஷாருக்கான், நயன்தாரா
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை மற்றும் இயக்கத்தில் ஒரு தனிப்பாடல் உருவாகவிருப்பதாகவும், இந்த பாடல் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிற்கு புரமோஷன் செய்ய பயன்படுத்தும் பாடல் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த பாடலின் புரமோ தற்போது வெளிவந்துள்ளது. ஜெய் ஹிந்த் ஹிந்த், ஜெய் இந்தியா என்று தொடங்கும் இந்த பாடலின் புரமோவில் ஏ.ஆர்.ரஹ்மானும், ஷாருக்கானும் நடித்துள்ளனர். ஷாருக்கான், ஏ.ஆர்.ரஹ்மான், நயன்தாரா, சிவமணி, நீதிமோகன், ஸ்வேதாமேனன், உள்பட பலர் தோன்றும் இந்த பாடலை குல்ஜார் எழுதியுள்ளார். இந்த பாடலின் முழு வடிவம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த பாடலின் டீசருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பாடல் வெளியான ஒருசில மணி நேரங்களில் சுமார் 3 லட்சம் பார்வையாளர்களும், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களும் குவிந்துள்ளது. இந்த டீசரின் இறுதியில் ஷாருக்கானும் ரஹ்மானும் ஹாக்கி பேட்டை தூக்கி போட்டு பிடிக்கும் காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.
Presenting the promo for 'Jai Hind India' the song for Hockey World Cup 2018 with @iamsrk and wonderful musicians who have collaborated for this track. https://t.co/MqzMPZGUXG@nupur_mahajan @Naveen_Odisha #HeartBeatsForHockey #AbBasHockey #HWC2018 #BToSProductions #Nayanthara
— A.R.Rahman (@arrahman) November 18, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com