படப்பிடிப்பின்போது பிரபல நடிகைக்கு விபத்து! கண்களில் ரத்தம் வந்ததால் பரபரப்பு

  • IndiaGlitz, [Saturday,March 24 2018]

பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் படப்பிடிப்பின்போது காயம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கண்களில் இருந்து ரத்தம் வந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது

சல்மான்கான் நடித்து வரும் 'ரேஸ் 3' படத்தின் படப்பிடிப்பு அபுதாபியில் நடைபெற்று வருகிறது.  இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஸ்குவாஷ் விளையாட்டு காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக ஜாக்குலின் கண்ணில் பந்துபட்டது. இதனால் கண்ணின் மேல் பகுதியில் ரத்தம் கொட்டத் தொடங்கியது. இதனையடுத்து ஜாக்குலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்த படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் இந்த விபத்து குறித்து கூறியபோது, 'இது ஒரு சிறிய விபத்துதான். ஜாக்குலின் தற்போது சிகிச்சை எடுத்து கொண்டதோடு, படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்' என்று கூறினார். கடந்த வாரம் ஜாக்குலின் இதே படத்திற்காக சில ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கள்ளக்காதலனின் உதவியால் அக்காவை கொலை செய்த கொடூர தங்கை

அக்கா கணவரின் சொத்துக்களை அடைய அக்காவை கொலை செய்ய கள்ளக்காதலனை ஏவிவிட்ட தங்கை ஒருவரின் வெறிச்செயல் திருப்பூர் பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதவியாளர் சம்பளம்: சூர்யா-விஷால் எடுத்த அதிரடி முடிவுக்கு வரவேற்பு

ஒட்டுமொத்த திரையுலகமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் தயாரிப்பாளர்களின் பிரச்சனைகளை தீர்க்க தினமும் ஒரு சங்கத்திடம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் சந்திப்பில் நடந்த முக்கிய ஆலோசனை என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள நிலையில் நேற்று ரஜினியின் அழைப்பை ஏற்று கார்த்திக் சுப்புராஜ்,

லாலு பிரசாத் யாதவுக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை: நீதிமன்றம் அறிவிப்பு

முன்னாள் பீகார் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் மீதான மூன்று கால்நடை தீவன வழக்கில் ஏற்கனவே தீர்ப்பு அளிக்கப்பட்டு அவர் சிறையில் இருக்கும் நிலையில்

சிஸ்டம் புரியாதவர், கருத்து கந்தசாமி: ரஜினி, கமலை மறைமுகமாக தாக்கிய ஓபிஎஸ்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல்நலம் காரணமாக தமிழகத்தில் சக்தி வாய்ந்த தலைவர்கள் இல்லாத வெற்றிடம் இருப்பதாக கூறப்படுகிறது