படப்பிடிப்பின்போது பிரபல நடிகைக்கு விபத்து! கண்களில் ரத்தம் வந்ததால் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் படப்பிடிப்பின்போது காயம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கண்களில் இருந்து ரத்தம் வந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது
சல்மான்கான் நடித்து வரும் 'ரேஸ் 3' படத்தின் படப்பிடிப்பு அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஸ்குவாஷ் விளையாட்டு காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக ஜாக்குலின் கண்ணில் பந்துபட்டது. இதனால் கண்ணின் மேல் பகுதியில் ரத்தம் கொட்டத் தொடங்கியது. இதனையடுத்து ஜாக்குலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இந்த படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் இந்த விபத்து குறித்து கூறியபோது, 'இது ஒரு சிறிய விபத்துதான். ஜாக்குலின் தற்போது சிகிச்சை எடுத்து கொண்டதோடு, படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்' என்று கூறினார். கடந்த வாரம் ஜாக்குலின் இதே படத்திற்காக சில ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com