இர்பான்கானுக்கு வந்த கொடிய நோய் இதுதான்
- IndiaGlitz, [Friday,March 16 2018]
பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் சமீபத்தில் தான் ஒரு நோயினால் தாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நோய் என்னவென்று ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் என்ற நோயினால் தாக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: 'நான் நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறிவிட்டு அதன்பின்னர் “எதிர்பாராத நிகழ்வுகள்தான் நம்மை வளர்ச்சி அடைய செய்கின்றன. அதனை நான் கடந்த சில காலமாக உணர்ந்து வருகிறேன். நான் நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். ஆனால், என்னை சுற்றியிருப்பவர்களின் அன்பு மற்றும் பலம் எனக்குள் இருக்கும் வரை என்னுடய பலம் அதிகம் இருக்கும், மேலும் நான் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளேன். இந்த நோயில் இருந்து நான் மீள்வதற்காக விரைவில் வெளிநாடு செல்வுள்ளேன். அனைவரும் தங்களுடைய அன்பைத் தொடர்ந்து அனுப்பி வையுங்கள்' என்று கூறியுள்ளார்.
இர்பானின் இந்த டுவீட்டை அடுத்து அவர் விரைவில் குணமடைய ஆயிரக்கணக்கான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.